இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர். அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டி நாளை நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்த வேளையில் அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக நாளைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரத்துடன் தற்போது இந்திய அணி விளையாடி வருவதால் நிச்சயம் நாளைய போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை வெளிக்காட்டவே முனைவார்கள்.
அதோடு இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் ரோகித் சர்மாவும் தங்களது அணியை பலப்படுத்தி மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் நாளைய முதலாவது அரையிறுதி போட்டியின் போது மழையால் போட்டி நின்றால் என்ன நடக்கும்? அதற்கு விதிமுறைகள் கூறுவது என்ன? என்பது குறித்து தெளிவான விளக்கத்தை இங்கு காணலாம்.
அதன்படி நாளைய போட்டி முழுவதுமாக மழையால் நின்றாலோ அல்லது இரு அணிகளுமே குறைந்தது 20 ஓவர் பேட்டிங் செய்யாமல் இருந்தாலோ போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். அவ்வாறு மழையால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படுமாயின் ரிசர்வ் டே விதிமுறைகள் எல்லாம் இந்த போட்டிக்கு கிடையாது. புள்ளி பட்டியலின் அடிப்படையில் அந்த இரு அணிகளில் எந்த அணி மேலே இருக்கிறதோ அவர்களே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இதையும் படிங்க : பாபர் அசாம் இந்த விஷயத்துல தோத்துட்டாரு.. அதான் உண்மை – வெளிப்படையாக பேசிய ஷாஹித் அப்ரிடி
அந்த வகையில் பார்க்கையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் போட்டி ஒருவேளை மழையால் நின்றால் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதியானதாக அறிவிக்கப்படும். இருப்பினும் இந்த போட்டி முழுவதுமாக நடைபெற்று இந்திய அணி நியூசிலாந்து அணியை பழி தீர்க்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.