வலையில் விழுந்துட்டாங்க.. இனிமேல் அதையும் செய்ய முடியாம இந்தியா குழம்புவாங்க.. மைக்கேல் வாகன் கருத்து

Micheal Vaughan 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் கொதித்தெழுந்த இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விடுத்தனர். இருப்பினும் முதல் போட்டியில் முதல் 3 நாட்கள் திண்டாடிய அந்த அணி கண்டிப்பாக இந்தியாவிடம் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

வலையில் விழுந்துட்டீங்க:
ஆனால் ஓலி போப் அபாரமான சதமடித்து 196 ரன்கள் குவித்த உதவியுடன் தப்பிய இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இறுதியில் அதை வைத்தே சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி இங்கிலாந்துக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து விரித்த பஸ்பால் வலையில் இந்தியா விழுந்து விட்டதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதை விட தங்களுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமான மைதானத்தில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த போட்டியில் எந்த மாதிரியான பிட்ச்சை தயாரிக்கலாம் என்பதில் இந்தியா குழப்பத்தை சந்திக்கப் போவதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இங்கிலாந்து எதிலிருந்து மேலே வந்துள்ளது என்பதை பாருங்கள். இந்தியா சொந்த மண்ணில் அபாரமாக செயல்படக்கூடிய டெஸ்ட் அணிகளில் ஒன்றாகும். ஹைதராபாத் பிட்ச் உண்மையான சுழலை கொண்டிருந்தது. அங்கே முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 190 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்தியா இவ்வளவு ரன்கள் முன்னிலை பெற்றப் போட்டிகளில் எப்போதும் தோற்றதில்லை. எனவே இங்கிலாந்து பெற்ற வெற்றி மகத்தானதாகும். இந்த வெற்றி இங்கிலாந்தால் வெளிநாட்டில் வெல்ல முடியாது என்ற பேச்சுக்களுக்கான முற்றுப்புள்ளியாகும்”

இதையும் படிங்க: அவங்க இஷ்டத்துக்க விட்டா ஜெய்க்க முடியாது.. அதை உங்க கன்ட்ரோலில் வெய்ங்க.. ரோஹித்துக்கு டிகே கோரிக்கை

“நாம் பஸ்பாலுக்கு எதிராக எதிரணி கேப்டன்கள் முதல் முறையாக தடுமாறுவதை மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம். அந்த வலையில் லேட்டஸ்டாக இந்திய அணி சிக்கியுள்ளது. இப்போதும் இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். அவர்கள் திருப்பிக் கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் தற்போது அவர்கள் எந்த வகையான பிட்ச்களை தயாரிக்கலாம் என்பதிலும் குழப்பத்தை சந்தித்திருப்பார்கள்” என்று டெலிகிராப் இணையத்தில் கூறியுள்ளார்.

Advertisement