அவங்க இஷ்டத்துக்க விட்டா ஜெய்க்க முடியாது.. அதை உங்க கன்ட்ரோலில் வெய்ங்க.. ரோஹித்துக்கு டிகே கோரிக்கை

Dinesh Karthik 4
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதல் 3 நாட்கள் அபாரமாக விளையாடிய இந்தியா வெற்றியை கையில் வைத்திருந்தது. குறிப்பாக இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் 2வது இன்னிங்ஸில் 420 ரன்கள் குவித்த இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியா சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் 202 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் கடந்த 92 வருடங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாக பெற்றும் இந்தியா முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

டிகே ஆலோசனை:
முன்னதாக அந்த தோல்விக்கு 2வது இன்னிங்ஸில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 164/5 என சரிந்த இங்கிலாந்து கடைசியில் 420 ரன்கள் அடிக்கும் அளவுக்கு ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது. ஏனெனில் அது போன்ற சமயங்களில் ஃபீல்டிங்கை சரியாக மாற்றியமைத்து எதிரணியை அட்டாக் செய்வது கேப்டனின் முதன்மை வேலையாகும்.

இந்நிலையில் ஃபீல்டிங் செட்டிங் செய்வதில் இந்திய பவுலர்களின் விருப்பத்திற்கேற்றார் போல் ரோகித் செயல்படுவதாக தினேஷ் கார்த்திக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அந்த வேலையை பவுலர்களிடம் கொடுக்காமல் எதிரணியை அட்டாக் செய்யக்கூடிய ஃபீல்டிங்கை ரோகித் சர்மா தான் செட்டிங் செய்ய வேண்டுமென்று தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா கண்டிப்பாக சிறப்பாக பந்து வீசவில்லை”

- Advertisement -

“அடுத்த டெஸ்ட் போட்டியில் பவுலர்கள் செட்டிங் செய்யும் ஃபீல்டிங்கை ரோகித் சர்மா ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நிறைய தருணங்களில் பவுலர்கள் ரன்கள் வழங்கக்கூடாது என்பதற்காக தடுப்பாட்ட ஃபீல்டிங் வைப்பதை நான் பார்த்துள்ளேன். எனவே எதிரணி பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்வதற்கு தேவையான ஃபீல்டிங்கை வைக்க தன்னுடைய பவுலர்களிடம் ரோகித் சர்மா அழுத்தத்தை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஃபீனிக்ஸ் பறவையை போல போராடி இந்திய அணி வாய்ப்பை பெற்ற சர்பராஸ் கான்.. நன்றி சொன்ன தந்தை

“குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும் எதிரணியை அட்டாக் செய்ய வேண்டும் என்பதை ரோகித் சர்மா புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் 9, 10வது இடத்தில் களமிறங்கிய டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் எளிதாக சிங்கள் எடுத்தனர். அதை அவர் அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement