யாரும் அடக்கமுடியாத தென்னாப்பிரிக்க அணியையே அந்த விடயத்தில் மடக்கிய இந்திய அணி – இதை கவனிச்சீங்களா?

IND-vs-RSA
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அடுத்து பலம் வாய்ந்த அணியாக இருக்கும் தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்திருந்த வேளையில் நேற்று கொல்கத்தா நகரில் நடைபெற்ற முக்கிய லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்தது. பின்னர் 327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் துவக்கத்திலிருந்து தடுமாறியது.

- Advertisement -

இறுதியில் 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தென்னாபிரிக்க அணி 83 ரன்களுக்கு சுருண்டதால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஒரு மோசமான சாதனையையும் பதிவு செய்து இந்த தொடரில் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.

அந்த வகையில் உலக கோப்பை போட்டிகளில் மிகவும் குறைந்த ரன்களுக்கு இந்திய அணிக்கு எதிராக சுருண்டு அவர்கள் மோசமான நிலையை சந்தித்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 2007-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 149 ரன்களில் சுருண்டது.

- Advertisement -

அதுவே உலகக்கோப்பை போட்டிகளில் அவர்கள் அடித்த குறைவான ரன்களாக இருந்தது. இந்நிலையில் தற்போது 16 ஆண்டுகள் கழித்து நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 83 ரன்களில் சுருண்டு உலக கோப்பை போட்டியில் தங்களது குறைந்த ரன் குவிப்பை பதிவு செய்தது. அதோடு நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

இதையும் படிங்க : இந்தியாவை தோற்கடிக்க அந்த அணியால் மட்டுமே முடியும்.. வாசிம் அக்ரம் வித்யாசமான பாராட்டு

இந்த 2023-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் போட்டிகளில் ஒரு சிக்சரை கூட அடிக்காமல் ஆட்டமிழந்ததுள்ளது இதுவே முதல்முறை. தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டரில் வேண்டர் டுசைன், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிளாஸன் போன்ற அதிரடியான வீரர்கள் இருந்தும் இந்திய அணிக்கு எதிராக அவர்களால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement