IND vs WI : வெ.இ மண்ணில் உச்சக்கட்டமாக அடித்த இந்தியா – 2005இல் செய்த 18 வருட தனித்துவ சாதனையை உடைத்து அபார சாதனை

IND vs WI Sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் முறையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியது. அதில் முதல் போட்டியில் போராடி வென்று முன்னிலை பெற்ற இந்தியாவை 2வது போட்டியில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டது. மறுபுறம் உலக கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனை என்ற பெயரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்து கொடுத்த வாய்ப்பில் இளம் வீரர்கள் இந்தியாவுக்கு படுதோல்வியை பெற்று கொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அந்த நிலைமையில் ட்ரினிடாட் நகரில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியிலும் ரோஹித், விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பொறுப்பாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 351/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 77 (64) சுப்மன் கில் 85 (92) சஞ்சு சாம்சன் 51 (41) சூரியகுமார் யாதவ் 35 (30) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுக்க கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 70* (52) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 352 என்ற கடினமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரெண்டன் கிங் 0, கெய்ல் மேயர்ஸ் 4, கேப்டன் ஷாய் ஹோப் 5 என முக்கிய வீரர்கள் ஆரம்ப முதலே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 35.3 ஓவரிலேயே 151 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 39* (34) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006க்குப்பின் தொடர்ந்து 13வது முறையாக தொடரை வென்று கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டது. முன்னதாக இந்த போட்டியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்களை குவித்ததால் 50 ஓவர்களில் 351/5 ரன்களை குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

இதற்கு முன் 2009இல் கிங்ஸ்டன் மைதானத்தில் யுவ்ராஜ் சிங் சதமடித்த உதவியுடன் 339 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த விரிவான பட்டியல் இதோ:
1. 351/5 : ட்ரினிடாட், 2023*
2. 339/6 : கிங்ஸ்டன், 2009
3. 312/8 :போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2022
4. 311/7 : போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2013
310/5 : போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2007

அதை விட இந்த போட்டியில் இசான் கிசான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஹர்திக் பாண்டியா என 4 வீரர்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த காரணத்தாலேயே இந்தியா 351/5 ரன்கள் குவித்தது. இருப்பினும் அவர்களில் யாருமே சதமடிக்காமலேயே இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்து அசத்தியது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் சதமடிக்காமலேயே இந்தியா தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து தனித்துவமான சாதனையையும் படித்துள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மெகா வெற்றி – இங்கிலாந்தின் 6 வருட சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை

இதற்கு முன் கடந்த 2005ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட் 85*, சச்சின் டெண்டுல்கர் 93, இர்பான் பதான் 83 என 3 வீரர்கள் சதமடிக்காத போதிலும் பெரிய ரன்கள் குவித்த உதவியால் இந்தியா 350/6 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த விரிவான பட்டியல் இதோ:
1. 351/5 : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, ட்ரினிடாட், 2023
2. 350/6 : இலங்கைக்கு எதிராக, நாக்பூர், 2005
3. 349/7 : பாகிஸ்தானுக்கு எதிராக, கராச்சி, 2004
4. 348/5 : வங்கதேசத்துக்கு எதிராக, தாக்கா, 2004
5. 340/6 : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ராஜ்கோட், 2020

Advertisement