IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மெகா வெற்றி – இங்கிலாந்தின் 6 வருட சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை

India In WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது. குறிப்பாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வெடுத்து கொடுத்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்ட இளம் வீரர்கள் 2019க்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை பெற்றுக் கொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அந்த நிலைமையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியிலும் ரோகித் மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்த நிலையில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா முதலில் பேட்டிங் செய்து 351/5 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக இஷான் கிசான் 77 (64) சுப்மன் கில் 85 (92) சஞ்சு சாம்சன் 51 (41) சூரியகுமார்யாதவ் 35 (30) என களமிறங்கிய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவித்த நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 5 சிக்சருடன் 70* (51) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 352 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 35.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 151 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 39* (43) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்று வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்க இளம் வீரர்களே போதும் என்பதை நிரூபித்தது. அத்துடன் 2006க்குப்பின் தொடர்ந்து 17 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒருநாள் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் காப்பாற்றியுள்ள இந்தியா தொடர்ந்து 13வது தொடரை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு 85 ரன்கள் அடித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் முழுவதும் அசத்திய இசான் கிசான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

- Advertisement -

அவை அனைத்தையும் விட இந்த போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற இங்கிலாந்தின் 6 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, ட்ரினிடாட், 2023*
2. இங்கிலாந்து : 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, பார்படாஸ், 2017
3. ஆஸ்திரேலியா : 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, பஸ்ஸேட்ரி, 2008

அத்துடன் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை படைத்திருந்தது. அந்த நிலைமையில் இந்த போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக ஒரே காலண்டர் வருடத்தில் 2 ஒருநாள் போட்டிகளில் 200 அல்லது மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : இந்தமுறை மிஸ் ஆயிடுச்சி.. ஆனா அடுத்தமுறை விடவே மாட்டேன் – சவால் விட்ட தொடர்நாயகன் இஷான் கிஷன்

அந்த வகையில் முதன்மை வீரர்கள் இல்லாமலே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்தியா அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதம் 2023 ஆசிய கோப்பையில் தான் ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement