IND vs SA : டி20 கிரிக்கெட்டில் மாபெரும் 2 உலக சாதனைகளை படைத்த இந்தியா – முழுவிவரம் இதோ

Deepak Chahar IND
- Advertisement -

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் போராடி 106/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் அதிரடியாக 41 (35) ரன்களும் மார்க்ரம் 25 (24) ரன்களும் வேன் பர்ணல் 24 (37) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

- Advertisement -

அதை தொடர்ந்து 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 17/2 என்ற தடுமாற்ற தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக பேட்டிங் செய்தார். மறுபுறம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பொறுமையாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் அவருக்கு கம்பெனி கொடுத்தார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய கடைசி வரை அவுட்டாகாமல் 16.4 ஓவரில் 110/2 ரன்களை எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தது.

மிரட்டிய பவுலர்கள்:
இதில் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் கடைசி வரை பொறுமையாகவே விளையாடிய ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுக்க மறுபுறம் தென்னாப்பிரிக்க பவுலர்களைப் பந்தாடிய சூரியகுமார் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்கள் விளாசி சிக்சருடன் பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார். முன்னதாக கடந்த 2019க்குப்பின் முதல் முறையாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் ரன் மழை பொழிவார்கள் என்ற ஆர்வத்துடன் வந்த கேரள ரசிகர்களுக்கு மைதான பராமரிப்பாளர் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கி ஏமாற்றத்தை கொடுத்தார்.

INDvsRSA-Toss

அதை போட்டித் துவங்குவதற்கு முன்பாகவே சரியாக கணித்து டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தீபக் சஹர் முதல் ஓவரிலேயே கேப்டன் பவுமாவை டக் அவுட் செய்து மிரட்டினார். அதை பார்த்து உத்வேகமடைந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் ஸ்விங் செய்து 2வது ஓவரின் 2 பந்தில் டீ காக்’கை 1 ரன்னில் காலி செய்து கடைசி 2 பந்துகளில் ரோசவ் மற்றும் மில்லர் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார். போதாகுறைக்கு அடுத்து வந்த இளம் வீரர் திரிஷன் ஸ்டப்ஸ் தீபக் சஹர் வீசிய அடுத்த ஓவரில் கோல்டன் டக் அவுட்டானார். அதனால் 9/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி 50 ரன்களை தாண்டுமா என அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது மார்க்ரம், மகாராஜ் ஆகியோர் தைரியமாக விளையாடி ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார்.

- Advertisement -

1. இப்போட்டியில் 9/5 என தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவர்களில் குறைந்த ரன்களில் எதிரணியின் 5 விக்கெட்டுகள் எடுத்த அணி” என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை தகர்த்தது புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:

Arshdeep Singh

1. தென் ஆப்பிரிக்கா : 9/5 (2.3 ஓவர்கள்) – இந்தியாவுக்கு எதிராக, திருவனந்தபுரம், 2022*
2. தென்ஆப்பிரிக்கா : 10/5 (3.4 ஓவர்கள்) – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, போர்ட் எலிசபெத், 2007
3. தென்ஆப்பிரிக்கா : 31/5 (5.5 ஓவர்கள்) – இந்தியாவுக்கு எதிராக, டர்பன்,2007

- Advertisement -

2. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் விளையாடிய போட்டியையும் சேர்த்து இந்த வருடம் 30 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக போட்டிகளில் விளையாடி அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை மீண்டும் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : அவரோட விக்கெட்டை எடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம் – ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங் பேட்டி

அந்தப் பட்டியல்:
1. இந்தியா : 30* (2022)
2. பாகிஸ்தான் : 29 (2021)
3. வங்கதேசம் : 27 (2021)
4. நெதர்லாந்து : 25 (2019)
5. வெஸ்ட் இண்டீஸ் : 25 (2021)

Advertisement