IND vs RSA : அவரோட விக்கெட்டை எடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம் – ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங் பேட்டி

Arshdeep-Singh
- Advertisement -

திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது.

Arshdeep Singh

- Advertisement -

இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் தீபக் சாகர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சின் போது சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 32 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே டக் அவுட்டில் கிடைத்தவை. இதன் காரணமாக அவருக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில் :

Miller

நான் ஆட்டநாயகன் விருதினை வெல்வதினை சற்று அதிகமாகவே எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இது போன்ற போட்டிகளில் இந்திய அணிக்கு எனது பங்களிப்பை தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதல் ஓவரிலேயே தீபக் சாகர் மிகச் சிறப்பாக பந்து வீசி மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை வெளிக்காட்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். அதன் பின்னர் என்னுடைய திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொண்டேன். சரியான லென்த்தில், சரியான இடத்தில் பந்து வீசினால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதன்படி என்னால் ஒரே ஓவரில் மூன்று விக்கெட் எடுக்க முடிந்தது. அதிலும் குறிப்பாக மில்லரின் விக்கெட்டை எடுத்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ஏனெனில் என்னுடைய அவுட் ஸ்விங் பந்திற்காக மில்லர் காத்திருந்தார். ஆனால் நான் அவருக்கு எதிராக இன்ஸ்விங் பந்தினை வீசினேன். அவருடைய விக்கெட்டை எடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs SA : நேற்றைய டி20 போட்டியில் படுமோசமான உலக சாதனை, கே.எல் ராகுலை – கலாய்க்கும் ரசிகர்கள்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மகாராஜின் விக்கெட்டையும் நான் எடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் சிறப்பாக விளையாடிவிட்டார். அவரது விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. இந்த போட்டியில் மீண்டும் மிகச்சிறப்பாக திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சிறப்பான செயல்பாட்டை நான் இனிவரும் போட்டிகளிலும் வெளிப்படுத்துவேன் என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement