IND vs SA : நேற்றைய டி20 போட்டியில் படுமோசமான உலக சாதனை, கே.எல் ராகுலை – கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul Suryakumar Yadav IND vs RSA
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய பவுலர்களின் நெருப்பான பந்துவீச்சில் 20 ஓவர்களில் 106/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் பவுமா, டீ காக் என டாப் 5 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 9/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மார்க்ரம் 25 (24) ரன்களும் வென் பர்ணல் 24 (37) ரன்களும் இறுதியில் கேசவ் மகாராஜ் அதிரடியாக 41 (35) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 107 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக விராட் கோலி 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 17/2 என தடுமாற்ற தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல சரவெடி பேட்டிங்கை துவங்கினார்.

- Advertisement -

அற்புதமான டெஸ்ட் இன்னிங்ஸ்:
மறுபுறம் அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் செயல்பட்ட கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களை உடைப்பதற்காக மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய இந்த ஜோடியில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் சிக்சருடன் பினிஷிங் செய்ய மறுபுறம் கடைசிவரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுத்தார். அதனால் 16.4 ஓவரில் 110/2 ரன்கள் எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக 2019க்குப்பின் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக முன்னேறிய கேஎல் ராகுல் 17 கோடி என்ற உச்சத்தை எட்டிய தனது ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள சமீப காலங்களில் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதாக ஆதாரத்துடன் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்தது ஜிம்பாப்வே தொடரில் தடுமாறிய அவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டாகி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ரசிகர்கள் கடுப்பாக வைத்தது.

- Advertisement -

அதனால் பெரும்பாலான ரசிகர்கள் அணியிலிருந்து நீக்கக் கோரும் நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் மட்டும் அடித்த அவர் எஞ்சிய போட்டிகளில் சொதப்பினார். மேலும் நேற்றைய போட்டியில் விமர்சனங்களை நிறுத்த பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பம் முதலே தடவிய பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப கடினமான பிட்ச்சில் 107 ரன்களை துரத்தும் போது 51* (56) ரன்களை 91.07 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது சரியானதே என்று சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் முதல் 36 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை அன்றிச் நோர்ட்ஜெ மட்டும் பிடித்திருந்தால் இந்த ரன்களும் வந்திருக்காது. மேலும் இலக்கு 130 ரன்களாக இருந்திருந்தால் கூட நிச்சயம் அவரது ஆட்டம் தோல்வியை பரிசளித்திருக்கும். இருப்பினும் இந்த இன்னிங்ஸ் அவர் ஃபார்முக்கு திரும்ப உதவும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் விளையாடிய அவர் கடைசி வரை அதிரடியை துவக்காமலேயே பேட்டிங் செய்தது நிச்சயம் அவருக்கு எந்த வகையிலும் உதவாது.

- Advertisement -

ஏனெனில் இப்போதும் அவர் பார்மை இழக்கவில்லை,பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் விளையாடுகிறார். அந்த பயம் நேற்றைய போட்டியில் தெரிந்த நிலையில் டி20 இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை சூரியகுமார் யாதவ் காட்டினார். அதற்கு அப்படியே நேர்மாறாக டி20 கிரிக்கெட்டில் எப்படி அற்புதமான டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவது என்பதை ராகுல் காட்டினார்.

எது எப்படியோ ரசிகர்கள் அவரை கலாய்க்கும் நிலையில் நேற்றைய போட்டியில் 56 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள்) மிகவும் மெதுவாக அரை சதமடித்த வீரர் என்ற கௌதம் கம்பீர் சாதனையை முறியடித்து புதிய மோசமான உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : தோனியின் ஆல்-டைம் சாதனையை காலி செய்த ரோகித் சர்மா – ஆனால் பேட்டிங்கில் படுமோசமான சாதனை

அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் : 56*, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2022*
2. கவுதம் கம்பீர் : 54, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2012
3. சோயப் கான் : 53

Advertisement