ஆஸியை தோற்கடித்த இந்திய அணி.. பாகிஸ்தானை முந்தி 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் வரலாறு காணாத சரித்திர உலக சாதனை

Team india 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 276 ரன்கள் சேர்த்தது.

சற்று தடுமாற்றமான பேட்டிங்கையே வெளிப்படுத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ஜோஸ் இங்லிஷ் 45 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்து 300 ரன்களை தொடவிடாமல் கட்டுப்படுத்தினார். அதைத்தொடர்ந்து 277 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு துவக்க வீரர்கள் சுப்மன் கில் 74, ருதுராஜ் கைக்வாட் 71 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

இந்தியாவின் சரித்திரம்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 3, இஷான் கிசான் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஜோடி சேர்ந்து அசத்திய சூரியகுமார் யாதவ் 50 ரன்களும் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களும் எடுத்து 48.4 ஓவரிலேயே இந்தியாவை எளிதான வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பந்து வீச்சிலும் தடுமாற்றமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெற்றி கண்ட இந்தியா ஆசிய கோப்பை வெற்றியுடன் மிகப்பெரிய தன்னம்பிக்கையை பற்றி 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு தயாராகியுள்ளது. அதை விட இந்த வெற்றியால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 116 புள்ளிகளை பெற்ற இந்தியா 115 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தானை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அத்துடன் ஏற்கனவே டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியா டி20 தரவரிசையிலும் 264 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருநாள் தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை படித்துள்ள இந்தியா உலகிலேயே ஒரே சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையை சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: IND vs AUS : நல்லவேளை நாங்க எல்லாரும் ஃபிட்டா இருக்கோம். இல்லனா கஷ்டம் தான் – வெற்றிக்கு பிறகு கே.எல் ராகுல் பேட்டி

இதற்கு முன் தென்னாப்பிரிக்கா மட்டுமே கடந்த 2016ஆம் ஆண்டு இப்படி 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. அந்த அணியின் சாதனையை தற்போது சமன் செய்து பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளால் எட்ட முடியாத உச்சத்தை எட்டியுள்ள இந்தியா வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றையும் எழுதியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement