IND vs AUS : நல்லவேளை நாங்க எல்லாரும் ஃபிட்டா இருக்கோம். இல்லனா கஷ்டம் தான் – வெற்றிக்கு பிறகு கே.எல் ராகுல் பேட்டி

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 276 ரன்களை குவித்தது.

பின்னர் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், கே.எல் ராகுல் ஆகிய நான்கு வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : கேப்டன்சி செய்வது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே நான் சில போட்டிகளில் சிறப்பான கேப்டன்சி செய்துள்ளேன். இப்பொழுதும் எனக்கு கேப்டன்சி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. அதோடு நான் இந்த பணியை விரும்பி செய்து வருகிறேன்.

இன்று மதியம் போட்டி ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏனெனில் கொழும்புவில் நாங்கள் விளையாடும் போது சொர்க்கத்தில் இருப்பது போன்று இருந்தது. ஆனால் மொஹாலியில் வெயில் சற்று கடுமையாகவே இருந்தது. அதன் காரணமாக நாங்கள் உடலளவில் சற்று சவால்களை எதிர்கொண்டோம். நல்லவேளை அணியில் உள்ள அனைவருமே ஃபிட்னஸ்க்காக நிறையவே உழைக்கிறோம்.

- Advertisement -

அதனால் தான் எங்களால் களத்தில் எதையும் சமாளித்து சிறப்பாக செயல்பட முடிந்தது. இந்த போட்டியில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே நாங்கள் களமிறங்கியதால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டியிருந்தது. சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறியதும் சற்று கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனாலும் எங்களுடைய அனைவரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்த போட்டியில் எங்களால் சவால்களை எதிர்த்து வெற்றியை நோக்கி முன்னேற முடிந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸிக்கு எதிராக சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த ஷமி – ஜஹீர் கானுக்கு பின் 15 வருடம் கழித்து புதிய வரலாற்று சாதனை

குறிப்பாக நானும் இது போன்ற சவாலான சூழ்நிலைகளில் சூரியகுமார் யாதவுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே விளையாடுவது குறித்து பேசிக் கொண்டோம். அதோடு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் எளிதாக இலக்கை நோக்கி செல்ல முடியும் என்ற தெளிவு இருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் போட்டியை மிகவும் நெருக்கமாக கொண்டு சென்று வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement