IND vs AUS : ஆஸிக்கு எதிராக சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த ஷமி – ஜஹீர் கானுக்கு பின் 15 வருடம் கழித்து புதிய வரலாற்று சாதனை

Mohammed Shami 5
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அடுத்ததாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி மொஹாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்துள்ளது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ஜோஸ் இங்லிஷ் 45 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 277 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 71, கில் 74 என தொடக்க வீரர்களே பெரிய ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

ஷமியின் சாதனை:
அத்துடன் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் 3, இஷான் கிசான் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கேப்டன் கே எல் ராகுல் 58* ரன்களும் சூரியகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்து 48.4 ஓவர்களிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

முன்னதாக இப்போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான மொஹாலி மைதானத்தில் முதல் ஓவரிலிருந்தே அனல் பறக்கும் பந்துகளை வீசிய முகமது ஷமி 5 விக்கெட்களை சாய்த்தார். இதன் வாயிலாக இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் 16 வருடங்கள் கழித்து 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு கோவா மாநிலம் மார்கோவா நகரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் 5/42 விக்கெட்களை எடுத்ததே கடைசியாகும்.

- Advertisement -

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திர சாதனையும் முகமது ஷமி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 27*
2. ரவிந்திர ஜடேஜா : 24*
3. குல்தீப் யாதவ் : 24*
4. ஜாஹீர் கான் : 19
5. ஹர்பஜன் சிங் : 18
6. அஜித் அகர்கர் : 17

இதையும் படிங்க: IND vs AUS : சவாலான இலக்கையும் எளிதாக அடித்து நொறுக்கிய இந்திய அணி – ஒருவழியா அதிரடி புயலும் பார்முக்கு வந்தாச்சு

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின், முரளி கார்த்திக் ஆகிய ஸ்பின்னர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளனர்.

Advertisement