IND vs AUS : சவாலான இலக்கையும் எளிதாக அடித்து நொறுக்கிய இந்திய அணி – ஒருவழியா அதிரடி புயலும் பார்முக்கு வந்தாச்சு

Ind vs Aus 2
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023 உலகக்கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராக உதவும் இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. அதில் ரோஹித், விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஷமி வீசிய முதல் ஓவரிலேயே மிட்சேல் மார்ஷ் 4 ரன்னில் அவுட்டாக மறுபுறம் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 52 (53) ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அவருடன் 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் ஷமி வேகத்தில் க்ளீன் போல்ட்டாக மறுபுறம் தடுமாறிய லபுஸ்ஷேன் அஸ்வின் சுழலில் 39 ரன்களில் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டானர்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அதை தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் தவறான புரிதலால் 31 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றதை போலவே மிடில் ஆர்டரில் ஜோஸ் இங்கிலீஷ் 45 (45) மார்கஸ் ஸ்டோனிஸ் 29 (21) ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் கேப்டன் பட் கமின்ஸ் அதிரடியாக 21* (9) ரன்கள் எடுத்தும் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 276 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.

அதைத்தொடர்ந்து 265 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் – கில் இளம் ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை கொடுத்தது. அதில் ருதுராஜ் சற்று பொறுமையுடன் விளையாட மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் கில் அதிரடியாக விளையாடி முதலாவதாக அரை சதமடித்தார்.

- Advertisement -

அதே போல மறுபுறம் தன்னுடைய தரத்தை காட்டிய ருதுராஜூம் அரை சதமடித்து 22 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 142 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு வலுவான துவக்கத்தை கொடுத்த போது 10 பவுண்டரியுடன் 71 (77) ரன்களில் ஆடம் ஜாம்பா சுழலில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 3 (8) ரன்னில் ரன் அவுட்டாக மறுபுறம் அசத்திய கில்லும் அடுத்த சில ஓவர்களில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74 (63) ரன்கள் எடுத்து ஆடம் ஜாம்பா சுழலில் சிக்கினார்.

அந்த நிலைமையில் வந்த இசான் கிசானும் தடுமாறி 18 ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அப்போது கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் நிலையாக நின்று 5வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சனங்களுக்குள்ளான சூரியகுமார் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (49) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : வேர்ல்டுகப் வரப்போகுது இந்த நேரத்தில் இப்படியா சொதப்புவீங்க. ரசிகர்களின் கேலிக்கு ஆளான – 3 இந்திய வீரர்கள்

இறுதியில் ராகுல் தன்னுடைய பங்கிற்கு கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 58* (63) ரன்கள் எடுத்ததால் 48.4 ஓவரிலேயே 281 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக பேட்டிங்க்கு சாதகமான மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா 300 ரன்களை தொட விடாத அளவுக்கு பவுலிங்கில் அசத்தியதன் காரணமாக இந்தியா எளிதான வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

Advertisement