- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே போட்டியில் 5.. ஆஸியின் அரிதான 70 வருட உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. போராடி வெல்லுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியை முடிந்தளவுக்கு போராடிய இந்தியா 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 6 ரன்களை முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

அரிதான உலக சாதனை:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இந்தியா 374 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 137, ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அந்த வகையில் இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 5 சதங்களை பதிவு செய்துள்ளார்கள். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் 5 சதங்களை அடித்து இந்தியா வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் இந்தியா 4 முறை ஒரு போட்டியில் 4 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு பின்:

கடைசியாக 2007 மிர்பூர் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாஃபர் ஆகியோர் சதமடித்திருந்தார்கள். மேலும் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் அடித்த முதல் ஆசிய அணி என்ற சரித்திரத்தையும் இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன் பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய அணிகள் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவைப் போல் இப்படி ஒரே போட்டியில் 5 சதங்கள் அடித்ததில்லை. இதே சாதனையை 1955ஆம் ஆண்டு கிங்ஸ்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஆஸ்திரேலியா 5 சதங்கள் அடித்து முதல் அணியாக படைத்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பின் தற்போது இந்தியா தான் அந்த 70 வருட உலக சாதனை சாதனையை சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: 333/4 டூ 364க்கு அவுட்.. மீண்டும் சொதப்பிய இந்தியாவுக்கு ஆப்படிக்குமா லீட்ஸ் வரலாறு? புள்ளிவிவரம் இதோ

இதைத் தொடர்ந்து 370 என்ற இலக்கை துரத்தும் இங்கிலாந்து 4வது நாளில் 21/0 ரன்களை எடுத்துள்ளது. கடைசி நாளில் 350 ரன்களை அடித்து இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே 10 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா சாத்தியமான வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -