இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை முடிந்தளவு போராடிய இந்தியா 465 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார்.
இந்தியா மீண்டும் சொதப்பல்:
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, சாய் சுதர்சன் 30, கேப்டன் சுப்மன் கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ஆனால் துவக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதத்தை அடித்து 147 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் மீண்டும் சதத்தை அடித்து 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 118 ரன்களை விளாசினார்.
அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 333/4 என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கருண் நாயர் 20 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் அதற்கடுத்ததாக வந்த தாக்கூர் 4, சிராஜ் 0, பும்ரா 0, பிரசித் கிருஷ்ணா 0 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் மறுபுறம் ரவீந்திர ஜடேஜா 25* ரன்கள் எடுத்தும் இந்தியா 364 ரன்கள் அவுட்டாகி சொதப்பியது.
அச்சுறுத்தும் லீட்ஸ்:
முதல் இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்டுக்கு 41 ரன்கள் மட்டும் எடுத்த இந்தியா இம்முறை 31 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை கோட்டை விட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 3, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதன் காரணமாக இங்கிலாந்து வெற்றி பெற இந்தியா 370 ரன்களை மட்டுமே நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க: மும்பை அணியில் இருந்தும் நீக்கப்பட்டதால் ப்ரித்வி ஷா எடுத்த சோகமான முடிவு – வேற வழியில்ல பாவம்
ஆனால் 26.81, 28.89, 27.51, 37.65, 40.06 என்பது 2015 முதல் லீட்ஸ் மைதானத்தில் 5 நாட்களின் பேட்டிங் சராசரியாகும். இதிலிருந்து இங்கே கடைசி நாளில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அதிக சாதகமாக இருந்து வருவதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இது போக 2019 ஆஷஸ் தொடரில் இங்கே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359, 1948 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 404 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளன. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெல்வது மிகவும் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.



