ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? ஆஸ்திரேலியர்களின் முகத்தில் கரியை பூசி நடுவரிடம் இந்தியா பதிலடி

Ravindra Jadeja Ball tampering
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை தீர்மானிக்கும் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே பிட்ச் பற்றி ஏராளமான விவாதங்கள் அனல் பறந்தன. அந்த நிலைமையில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக 2/2 என சரிந்த தங்களது அணியை 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 20 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா அரை சதம் கடந்து சிறப்பான சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

- Advertisement -

கரியை பூசிய பிசிசிஐ:
முன்னதாக இப்போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கி ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்கு சவால் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகிய டாப் 2 பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் காலி செய்து மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்து மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் முதல் நாளில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முகமது சிராஜ் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை தனது கையால் தொட்டு பந்து வீசும் விரல்களில் ரவீந்திர ஜடேஜா தடவிக் கொண்டது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

குறிப்பாக பந்தை இறுக்கமாக பிடித்து வீச வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு மர்ம பொருளை பயன்படுத்தி ஜடேஜா சீட்டிங் செய்தாரா? என்று மைக்கல் வாகன், டிம் பைன் போன்ற முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அது வலி நிவாரணியை போன்ற திரவம் தானே தவிர உங்களைப் போல் பந்தை சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட உப்பு காகிதம் அல்ல என்று இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் பந்தை மிகவும் இறுக்கமாக பிடித்து வீசியதால் கை விரல்களில் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காகவே வலி நிவாரணியை ரவீந்திர ஜடஜா கைகளில் தடவிக் கொண்டதாக இந்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்திய அணி நிர்வாகம் இப்போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்ட் அவர்களிடம் நேரடியாக விளக்கமளித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியர்கள் விமர்சிக்கும் அந்த வீடியோவில் அந்தப் பொருளை ஜடேஜா தனது கைவிரல்களில் தான் உபயோகப்படுத்தினாரே தவிர பந்தை சேதப்படுத்தும் நோக்கத்தில் பந்து மீது துளி கூட தேய்க்கவில்லை. அதனால் இந்தியாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட போட்டி நடுவர் இந்த விமர்சனத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அத்துடன் அந்த தருணத்திற்கு முன்பாகவே ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா ஆகிய 3 வீரர்களை ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கியிருந்தார். அதிலிருந்தே அது வெறும் வலி நிவாரணி தான் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் தேவையின்றி விமர்சித்த ஆஸ்திரேலியாவின் முகத்தில் இந்திய அணி நிர்வாகம் கரியை பூசியுள்ளது என்றே கூறலாம். இதை அறியும் இந்திய ரசிகர்கள் ஆரம்பத்தில் நாக்பூர் பிட்ச் பற்றி வேண்டுமென்றே குறை சொன்னது போல் தற்போது வலி நிவாரணியை உபயோகப்படுத்தியதை பந்தை சேதப்படுத்தியதாக வதந்தியை உருவாக்கிய ஆஸ்திரேலியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றின் வெற்றியாளர்க்ள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் – மெகா பட்டியல்

மேலும் இந்திய ரத்தத்தை கொண்டவர்கள் எப்போதும் நேரடியாக மோதி ஒன்று வெல்வார்கள் அல்லது தோற்றுப் போவார்களே தவிர உங்களைப் போல் பந்தை சேதப்படுத்துவதற்காக உப்புக் காகிதத்தை பயன்படுத்த மாட்டோம் என்றும் சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலியர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement