- Advertisement -
இந்திய கிரிக்கெட்

124 ரன்ஸ்.. தெ.ஆ 21 வருடத்தை மிஞ்சிய வரலாறு காணாத இலக்கு.. இந்தியா சேசிங் செய்து சாதனை படைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அங்குள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா சுமாராக பேட்டிங் செய்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணியும் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த கொல்கத்தா ஆடுகளத்தில் போராடி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

போராடிய பவுமா:

அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரிசப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 2வது இன்னிங்ஸில் போராடி 153 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரியன் ரிக்கல்டன் 11, ஐடன் மார்க்ரம் 4, வியான் முல்தார் 11, டோனி டீ ஜோர்சி 2, ட்ரிஷ்டன் 5, கெய்ல் வேர்ரின் 9, மார்கோ யான்சென் 13 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் யாருமே 20 ரன்கள் தாண்டவில்லை. மறுபுறம் தனியாளாக இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்த கேப்டன் பவுமா கடைசி வரை அவுட்டாகாமல் அரை சதத்தை அடித்து 55* ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கோர்பின் போஸ்க் 25 ரன்கள் எடுத்து கை கொடுத்தார்.

- Advertisement -

கடினமான இலக்கு:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து இந்தியா வெற்றி பெறுவதற்கு 124 ரன்களை தென்னாப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்துள்ளது. வரலாற்றில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எந்த அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் 120+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து வென்றதில்லை.

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் சுப்மன் கில் விளையாட மாட்டார்.. என்ன காரணம் – விவரம் இதோ

அதிகபட்சமாக 2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 117 ரன்கள் எடுத்து வென்றது. எனவே இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வரலாறு காணாத கடினமான இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது என்றே சொல்லலாம். கொல்கத்தா பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருப்பதால் 124 என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய இலக்கு என்று சொல்லலாம். அதே சமயம் கொல்கத்தாவில் எந்த அணியும் 150க்கும் குறைவான இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -