முதல் டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் சுப்மன் கில் விளையாட மாட்டார்.. என்ன காரணம் – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் நான்கு ரன்கள் எடுத்திருந்த வேளையில் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக மைதானத்தில் வலியால் சிரமப்பட்டார்.

எஞ்சியுள்ள நாட்களில் சுப்மன் கில் விளையாட மாட்டார் : வெளியான தகவல்

பின்னர் தொடர்ந்து அவர் விளையாட நினைத்தாலும் அவரால் பேட்டிங் செய்ய இயலவில்லை. இதன் காரணமாக மைதானத்திற்கு வந்த மருத்துவக்குழு உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரால் களத்தில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக மைதானத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர் ஓய்வறைக்கும் சென்று மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

அதன் காரணமாக எப்படியாவது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிவரை அவர் பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை என்பதனால் அவரது காயம் தீவிரம் அடைந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

பின்னர் சுப்மன் கில்லின் காயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த பிசிசிஐ-யும் : சுப்மன் கில்லுக்கு கழுத்துப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை பிசிசிஐ மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் அறிவித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது மருத்துவமனைக்கு சுப்மன் கில் அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டுள்ளதாகவும், அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதையும் படிங்க : 2 நாளில் கொல்கத்தாவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூச்சுக்கு மோசமான நிலை வந்துருச்சு.. ஹர்பஜன், வாகன் சாடல்

இந்நிலையில் தற்போது மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ள தகவலின் படி இந்த முதல் டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரரே களத்தில் பீல்டிங் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement