அவர வெச்சுகிட்டு ஆசிய கோப்பை ஜெயிக்கலாம் ஆனா அந்த 6 டீம வீழ்த்தி உ.கோ ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் – மதன் லால் ஓப்பன்டாக்

Madan Lal INDIA
- Advertisement -

வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பையில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. குறிப்பாக சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள இந்திய அணியினர் அதற்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் துவங்கும் ஆசிய கோபையில் களமிறங்குகின்றனர்.

Asia Cup INDIA

- Advertisement -

ஏற்கனவே 7 ஆசிய கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 8வது முறையாக இந்த ஆசிய கோப்பையையும் வென்று 2023 உலகக்கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குவதற்கு தயாராகி வருகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விக்கெட் கீப்பர் மற்றும் நம்பர் 4 பேட்டிங் இடத்தின் பிரச்சினை தீர்க்கும் வகையில் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் அதில் கேஎல் ராகுல் மீண்டும் லேசான காயத்தை சந்தித்திருப்பதால் ஆசிய கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ஜெயிக்க முடியாது:
குறிப்பாக முழுமையாக ஃபிட்டாகாத வீரரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என கபில் தேவ், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ஏற்கனவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாரான ஃபார்மில் திண்டாடிய அவர் காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி போட்டியில் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவதும் சரியான முடிவல்ல என்றும் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையை எளிதாக வென்றாலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற டாப் 6 அணிகளுக்கு சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்வது கடினம் என்று முன்னாள் வீரர் மதன் லால் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ராகுல் போன்ற ஃபிட்டாக இல்லாத வீரரை வைத்துக்கொண்டு சாதிப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்கள் ஆசிய கோப்பையை வெல்வார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஆனால் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா போன்ற டாப் 6 அணிகளுக்கு எதிராக வெல்வது கடினம். அத்தொடரில் அனைவருக்கும் வாய்ப்புள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் நமக்கு சற்று அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால் சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா அழுத்தமும் இந்தியாவுக்கு இருப்பது பின்னடைவாகும். இருப்பினும் இந்திய அணியில் இருக்கும் அனுபவமான வீரர்களுக்கு அழுத்தத்தை கையாள்வது நன்றாக தெரியும் என்பது சாதகமாகும்”

Madan-Lal

இதையும் படிங்க:உலகக்கோப்பை அணியில் அவர் மீண்டும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது – சவுரவ் கங்குலி கருத்து

“ஆனால் கேஎல் ராகுல் இந்திய வீரர்களின் ஃபிட்னஸ் லெவல் எனக்கு கவலையை ஏற்படுகிறது. ஏனெனில் முதன்மை போட்டிகளுக்கு முன்பாக சில போட்டிகளில் அவர்கள் விளையாடியிருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக போட்டிகளுக்கு முன்பாக சில முதன்மை போட்டிகளில் விளையாடியிருந்தால் அது அவர்கள் காயமின்றி தொடர்ந்து விளையாடுவதற்கு தேவையான தன்னம்பிக்கையை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement