உலகக்கோப்பை அணியில் அவர் மீண்டும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது – சவுரவ் கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய அணி கடைசியாக ஐசிசி தொடரை 2013-ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இதுவரை ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருக்கும் இவ்வேளையில் இந்த தொடரில் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Worldcup

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் நிருபர்கள் எதிர்வரும் உலக கோப்பை தொடர் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு கங்குலி பதில் அளிக்கையில் : இந்திய அணி உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று அனைவரும் கேட்கிறீர்கள். எல்லா நேரமும் உலக கோப்பையையும் எல்லாராலும் வென்று விட முடியாது. அதில் சில மோசமான நாட்களும் இருக்கும்.

Yuzvendra-Chahal

கோப்பையை வெல்வதற்கு பெரிய இடைவெளி விழும் இதெல்லாம் சகஜம் தான். இம்முறை இந்திய மண்ணில் இந்த தொடரானது நடைபெறவுள்ள வேளையில் நிச்சயம் இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல அதிக சாதகம் இருக்கிறது. நமது அணியில் உள்ள வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

- Advertisement -

ஒவ்வொரு தொடருமே ஒவ்வொரு சவால் நிறைந்தது. எனவே எந்த ஒரு தருணத்தையும் நாம் ஒப்பிட முடியாது. தற்போதைய இந்திய அணி மிக வலிமையாக உள்ளது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அக்சர் பட்டேல் இணைந்ததற்கு காரணமே அவருடைய பேட்டிங் திறமை தான் இது ஒரு நல்ல முடிவு என்று நான் சொல்வேன்.

இதையும் படிங்க : தனது குருவான மஹேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் – விவரம் இதோ

ஆனாலும் 17 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. யாராவது ஒருவர் காயமடைந்தால் நிச்சயம் அவர் உலகக் கோப்பை அணியில் தனது இடத்தினை பிடிப்பார் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement