ஜாக்கிரதையா இருங்க.. உங்கள தோக்கடிக்க அந்த டீமால முடியும் – இந்தியாவை எச்சரித்த மிஸ்பா உல் ஹக்

Mishbah Ul Haq
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியுள்ள இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்று 2011 போல கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்ற வகையில் செயல்பட்டு வருவகிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக இத்தொடரில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்து வந்த இந்தியாவுக்கு புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் நெதர்லாந்தை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று வந்த அந்த அணி அசால்டாக 300 – 400 ரன்கள் அடித்து எதிரணிகளை பந்தாடி வந்தது.

- Advertisement -

மிஸ்பா எச்சரிக்கை:
ஆனால் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் தெறிக்க விட்ட இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக அப்போட்டியில் விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 326 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும் அதை தொட முடியாத அளவுக்கு தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா போன்ற அணிகளிடம் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒன்று உறுதியாகியுள்ளது. ஆம் லீக் சுற்றில் இந்த தொடர்ச்சியான வெற்றிகள் நல்லது”

- Advertisement -

“ஆனால் நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் போது எந்தளவுக்கு நீங்கள் தொடர்ந்து அபாரமாக விளையாடி கோப்பையை வெல்பவர்களாக உருவெடுக்கிறீர்களோ அந்தளவுக்கு அழுத்தமும் உங்களை பின்பற்றும். அப்போது நீங்கள் 1 – 2 ஓவர்கள் தடுமாறினாலும் உடனடியாக உங்களுடைய அணி அழுத்தத்திற்கு உட்பட்டு விடும். அதனால் எஞ்சிய அணிகளுக்கு கோப்பையை வெல்ல இப்போதும் வெளிப்புற வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: யாரும் அடக்கமுடியாத தென்னாப்பிரிக்க அணியையே அந்த விடயத்தில் மடக்கிய இந்திய அணி – இதை கவனிச்சீங்களா?

அப்போது அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் ஆஸ்திரேலியா நாக் அவுட்டில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட மிஸ்பா தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “ஆம். முதலில் நாக் அவுட்டில் நீங்கள் மனதளவில் வெளியே வரவேண்டும். தற்போதைய நிலைமையில் தொடர்ச்சியான வெற்றிகளால் ஏற்கனவே இந்தியா எதிரணிகளை அழுத்தத்திற்கு உள்ளாக்கி 50% வெற்றியை பெற்றுள்ளது. எனவே மனதளவிலான தடையிலிருந்து வெளியே வந்து இந்த உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவை நம்மால் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை மற்ற அணிகளிடம் வரவேண்டும்” என்று கூறினார்.

Advertisement