ஒய்ட் வாஷ் செய்து வென்ற இந்தியா.. பாகிஸ்தானின் சாதனையை நொறுக்கி புதிய உலக சாதனை

IND vs PAK
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை என்ற 3 – 0 கணக்கில் இந்தியா வென்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியிலும் எளிதாக வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 22/4 என தடுமாறியது. அதனால் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக சதமடித்து 129* ரிங்கு சிங் 69* ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 212/4 ரன்கள் விளாசி தூக்கி நிறுத்தினார்கள்.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானும் ரஹமனுல்லா குர்பாஸ் 50, கேப்டன் இப்ராகிம் ஜாட்ரான் 50, குல்பதின் நைப் 55* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்தது.

அதனால் மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா 11/1 ரன்கள் எடுத்தது. ஆனால் ரவி பிஸ்னோய் வீசிய 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 1/2 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கூட தோற்றதில்லை என்று மிகப்பெரிய கௌரவத்தை இந்தியா தக்க வைத்து அசத்தியது.

- Advertisement -

அதை விட 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ள இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதையும் சேர்த்து மொத்தம் 9 தொடர்களில் எதிரணிகளை முழுமையாக தோற்கடித்து ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை நொறுக்கியுள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் 8 டி20 தொடர்களில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 117 டி20 மேட்ச்ல விராட் கோலி இப்படி அவுட் ஆகுறது இதுதான் முதல் முறையாம் – இதுலயும் சச்சின் சாதனை தகர்ப்பு

அந்த வகையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணி என்பதற்கு அடையாளமாக இத்தொடரில் செயல்பட்டுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை தயாராகும் பயணத்திலும் வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடி உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement