117 டி20 மேட்ச்ல விராட் கோலி இப்படி அவுட் ஆகுறது இதுதான் முதல் முறையாம் – இதுலயும் சச்சின் சாதனை தகர்ப்பு

Virat-Kohli
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று ஜனவரி 17-ஆம் தேதி பரபரப்பாக நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் நடைபெற்று இறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இரு அணிகளுமே சேர்ந்து இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரை தவிர்த்து 424 ரன்கள் குவித்திருந்தது. ஆனாலும் இந்த ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். இப்படி விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

ஆம் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்படி விழுந்த 4 விக்கெட்டுகளில் முதல் பந்திலேயே விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

இப்படி டக் அவுட்டானதின் மூலமும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை புரிந்தார் என்றால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான விராத் கோலி இதுவரை 117 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் தான் அவர் முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் அவுட்டானார். அதன்படி நேற்று ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமது வீசிய பந்தை அடிக்க நினைத்த விராட் கோலி முதல் பந்திலேயே கேட்ச் மூலம் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதையும் படிங்க : பக் பக்-ன்னு தான் இருந்துச்சி.. ஆனாலும் நானே தான் ரோஹித் கிட்ட கேட்டேன்.. சூப்பர் ஓவர் குறித்து – ரவி பிஷ்னாய் பேட்டி

அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் 34 முறை டக் அவுட்டாகி சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் அவரது அந்த சாதனையும் உடைத்த கோலி நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் 35-வது முறையாக டக் அவுட்டாகி அதிக முறை டக் அவுட்டாகிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையிலும் சச்சினை முந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement