பக் பக்-ன்னு தான் இருந்துச்சி.. ஆனாலும் நானே தான் ரோஹித் கிட்ட கேட்டேன்.. சூப்பர் ஓவர் குறித்து – ரவி பிஷ்னாய் பேட்டி

Ravi-Bishnoi
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான அணியை வீழ்த்தி இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்கள் குவிக்க பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எளிதில் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212 ரன்கள் குவித்து போட்டியை டிரா செய்தது.

- Advertisement -

பிறகு முதல் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் குவிக்க 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியும் 16 ரன்களையே குவிக்கவே சூப்பர் ஓவரும் சமமானது. இதன் காரணமாக இரண்டாவது சூப்பர் ஓவரும் நடைபெற்றது.

அந்த இரண்டாவது சூப்பர் ஓவரின் போது இந்திய அணி 11 ரன்களை குவிக்கவே 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது சுழப்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று பந்துகளில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது சூப்பர் ஓவரை வீசியது குறித்து போட்டி முடிந்து பேசிய ரவி பிஷ்னாய் கூறுகையில் : உண்மையிலேயே அப்போது அழுத்தம் நிறையவே இருந்தது. என்னுடைய இதயத்துடிப்பும் அதிகமாக இருந்தது. ஆனாலும் என்னுடைய வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று நினைத்தேன். மேலும் நானே தான் கேப்டனிடம் சென்று சூப்பர் ஓவரை வீசுகிறேன் என்று கூறினேன். ஏனெனில் “பேக் ஆப் லென்த்தில்” பந்து வீசினால் நிச்சயம் அது ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கசடமாக இருக்கும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : 2 ஆவது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னாய்க்கு ரோஹித் சர்மா குடுக்க காரணம் இதுதானா? – ராகுல் டிராவிட் கொடுத்த விளக்கம்

அதே போன்று பேட்ஸ்மேன்களால் பேக் புட்டில் பந்தை அடிப்பது சிரமம் என்றும் நினைத்தேன். அந்த வகையில் தான் நான் அப்படி பந்து வீசினேன். இந்த போட்டியில் சூப்பர் ஓவரில் எனது பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. நான் என்னுடைய லெக் ஸ்பின்னிற்காக வலைப்பயிற்சியிலும், டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் நிறைவே உழைத்து வருகிறேன் என ரவி பிஷ்னாய் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement