கேப்டன் பதவியேற்ற 3 மாதத்தில் சாதித்து காட்டிய ரோஹித். இந்திய அணி 6 வருஷத்துக்கு – பிறகு அடைந்த உச்சம்

Bishnoi
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் 3 போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து சொந்த மண்ணில் கில்லி என மீண்டும் நிரூபித்துள்ளது.

IND

- Advertisement -

சமீப காலங்களாக பேட்டிங் துறையில் மிடில் ஆர்டர் சொதப்பியதால் கையிலிருந்த வெற்றிகளைக் கூட இந்தியா எதிரணிக்கு பரிசளித்து வந்தது. இருப்பினும் அதில் கற்ற பாடங்களில் இருந்து அனுபவத்தைப் பெற்ற சூரியகுமார் யாதவ் போன்ற இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்கள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இந்த தொடரில் பொறுப்புடன் பேட்டிங் செய்து தேவையான ரன்களை குவித்ததால் இந்தியா எளிதான வெற்றியை ருசித்தது.

சூப்பர் இந்திய அணி தயார்:
அதேபோல இந்தத் தொடரில் பந்து வீச்சில் பார்ம் இல்லாமல் திணறி வந்த அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது பார்மை ஓரளவ மீட்டெடுத்துள்ளார். அவர்களுடன் ஹர்ஷல் படேல், தீபக் சஹர், ஷார்துல் தாகூர், ஆவெஷ் கான் என இதர வேகப்பந்து வீச்சாளர்களும் பொறுப்பாக செயல்பட்ட நிலையில் சுழல் பந்துவீச்சு கூட்டணியில் அனுபவம் வாய்ந்த யூஸ்வென்ற சஹாலுடன் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற ரவி பிஷ்னோய் தன் பங்கிற்கு அசத்தினார். அதேபோல் இந்த தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டராக ஜொலித்தார்.

indvswi

இவை அனைத்தையும் விட இந்த தொடரில் இந்தியாவிற்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகவும் அபாரமாக இருந்தது. களத்தில் கூலாக காட்சியளிக்கும் அவர் முக்கிய முடிவு எடுக்கும் தருணங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். மொத்தத்தில் இந்த டி20 தொடரில் அனைத்து துறைகளிலும் டிக் அடித்துள்ள இந்தியா ரோகித் சர்மா தலைமையில் முழுமையடைந்த அணியாக காட்சியளிக்கிறது.

- Advertisement -

நம்பர் ஒன் இந்தியா:
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு வைட்வாஷ் வெற்றியை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளதை அடுத்து சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதில் 269 புள்ளிகளை பிடித்துள்ள இந்தியா நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Rohith

2வது இடத்தில் இங்கிலாந்து அதே 269 புள்ளிகளுடன் இருந்தாலும் ரேட்டிங் புள்ளிகளை அடிப்படையில் இந்தியாவைவிட இங்கிலாந்து பின்தங்கியுள்ளது. அதாவது 10,484 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா 10, 474 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள இங்கிலாந்தை விட 10 புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதே பட்டியலில் பாகிஸ்தான் 3வது இடத்திலும் நியூசிலாந்து 4வது இடத்தையும் தென்ஆப்பிரிக்கா 5வது இடத்திலும் உள்ளது. 2021 டி20 உலக கோப்பையை வென்ற நடப்பு டி20 சாம்பியன் ஆஸ்திரேலிய 6வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

வேற லெவல் சாதனை:
இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சாதனை படைத்துள்ளது இந்திய ரசிகர்களை வியப்பை கொடுத்துள்ளது. ஆம் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி அந்த இடத்தை பிடித்து 2 மாதங்கள் மட்டும் நம்பர்-1 அணியாக வலம் வந்தது.

Kohli

அதன்பின் கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையில் நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முதல் முறையாக இந்தியா டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. ஆனாலும் அவரால் இந்தியாவை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் இந்தியா டி20 அணிக்கு முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான முதல் தொடரிலேயே 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்தார்.

இதையும் படிங்க : கடந்த தொடரில் செய்த தவறை இந்த தொடரில் திருத்திய வெங்கடேஷ் ஐயர் – உ.கோ அணியில் இடம் உறுதி

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றதன் காரணமாக வெறும் 3 மாதத்தில் இந்தியாவை நம்பர் ஒன் டி20 அணியாக அவர் மாற்றியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 2017 – 2021 வரை சுமார் 6 வருடங்களாக கேப்டனாக இருந்த விராட் கோலியால் முடியாததை வெறும் 3 மாதங்களுக்குள் சாதித்து காட்டியுள்ளது உண்மையாகவே மிகச் சிறந்த கேப்டன்ஷிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

Advertisement