கடந்த தொடரில் செய்த தவறை இந்த தொடரில் திருத்திய வெங்கடேஷ் ஐயர் – உ.கோ அணியில் இடம் உறுதி

Venky-1
- Advertisement -

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வெங்கடேச ஐயர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டாம் பாதியில் இடம்பிடித்தார். அதன்பின்னர் 10 போட்டிகளில் விளையாடிய அவர் பேட்டிங்கில் ஓபனராக களமிறங்கி ரன்களை குவித்து அசத்தியதுடன் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் தனது சிறப்பான பணியை கொல்கத்தா அணியில் செய்தார். அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் வெகு விரைவிலேயே இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று அனைவரும் கூறிவந்தனர்.

venky

இவ்வேளையில் 27 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்திய அணிக்காக டி20 போட்டியில் இடம் பிடித்தார். இதுவரை 5 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஹார்டிக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இடம் பிடித்த வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியிலும் தொடர்ந்து வருகிறார்.

- Advertisement -

கடைசியாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியில் இடம் பிடித்தார். இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதலாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவுடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

venky

அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்து தனது அமர்க்களமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மேலும் கடைசியாக நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியின் போது இந்திய அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தவித்தபோது சூரியகுமார் யாதவுடன் கைக்கோர்த்த வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அதிரடியில் அசத்தினார். அதோடு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரின் போது மோசமாக சொதப்பிய அவர் தற்போது மீண்டும் இந்த டி20 தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி உள்ளதால் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பெறுவார் என்று உறுதியாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என்றும் மித வேகப்பந்து வீச்சு அங்கு சாதகம் என்பதனால் அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி மித வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் வெங்கடேஷ் நிச்சயமாக உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : ரிதிமான் சஹாவிடம் கூறியது என்ன? – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் டிராவிட்

மேலும் கடந்த தென்னாப்பிரிக்க தொடரின்போது தனது பார்மில் சற்று தடுமாறிய அவர் தற்போது டி20 தொடரில் பின்வரிசையில் இறங்கி அதிரடியாக ரன்களை சேர்த்து வருவதால் அவர் மீது ஏகப்பட்ட நம்பிக்கை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் வெங்கடேஷ் ஐயர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று உறுதி செய்துள்ளதால் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement