ரிதிமான் சஹாவிடம் கூறியது என்ன? – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதில் நீண்ட நாட்களாக ரன்கள் குவிக்க தடுமாறி வரும் அனுபவ வீரர்கள் செட்டேஸ்வர் புஜரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ள இந்திய தேர்வு குழுவினர் மூத்த வீரர்களான விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவையும் நீக்கியுள்ளார்கள்.

வாய்ப்பு முடிந்த சஹா:
கடந்த சில வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்து நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். அதன் காரணமாக எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற பின் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த சஹாவுக்கு சமீப காலங்களாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் ரிஷப் பண்ட் அளவுக்கு அவர் ரன்கள் குவிக்க தடுமாறுகிறார். அத்துடன் 37 வயதை கடந்த அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்க இந்திய அணி நிர்வாகம் கருதியதால் இலங்கை டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

Saha-1

முன்னதாக இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடமில்லை என தேர்வு குழு தலைவர் கேப்டன் சர்மா வெளிப்படையாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து விட்டதாக ரித்திமான் சஃகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க நினைப்பதால் இலங்கை தொடர் மட்டுமல்லாது வருங்காலங்களில் எப்போதுமே இடம் கிடையாது என சேட்டன் சர்மா கூறியதாக சஹா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஓய்வு பெற சொன்ன டிராவிட்:
அதேபோல் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய சஹா இக்கட்டான நிலைமையில் இந்தியா தடுமாறிய போது அரைசதம் அடித்து அசத்தினார். அந்த தருணத்தில் “நான் பிசிசிஐ தலைவராக இருக்கும்வரை இந்திய அணியில் நீ இருப்பாய்” என சௌரவ் கங்குலி பாராட்டியதாக சஹா கூறினார். ஆனால் ஒருசில தேர்வு குழுவினர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நினைப்பதால் இந்திய அணியில் இருக்கும் போதே ஓய்வு பெறுவதை பற்றி சிந்திக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியது வேதனை அளித்ததாக நேற்று முன்தினம் சஹா தெரிவித்திருந்தார்.

saha

உண்மையில் நடந்தது என்ன:
இந்நிலையில் சகாவிடம் உண்மையாகவே கூறியது என்ன என்பது பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தற்போது தாமாகவே முன்வந்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இதற்காக நான் மனம் வருந்தவில்லை. சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக சஹா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. இந்திய அணியில் அவருக்கான இடத்தைப் பற்றி தெளிவான நிலையை உணர்த்தவே விரும்பினேன். இது பொதுவாக வீரர்களிடம் பேசுவதில் ஒரு அம்சமாகும். மேலும் நான் கூறும் வார்த்தைகளை அனைவரும் கேட்க வேண்டும் என எப்போதும் நான் விரும்புவதில்லை” என கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக சஹா தெரிந்து கொள்வதைவிட அவரின் உண்மையான நிலை பற்றி அவருக்கு உணர்த்த விரும்பும் எண்ணத்திலேயே அவ்வாறு கூறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் இந்திய 11 பேர் அணி தேர்வு செய்யப்படுவதை பற்றி நான் வெளிப்படையாக பேசுவேன். அதேபோல அணியில் இடம் பிடிக்காத வீரர்களுக்கு ஏன் இடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை கேட்க வாய்ப்பளிப்பேன். பொதுவாக ஒருவரை அணியில் இருந்து நீக்கும் போது அந்த வீரருக்கு சோகம் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும்” என கூறியுள்ளார்.

saha 1

என்ன காரணம்:
சஹாவுக்கு எதனால் இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்பது பற்றி ராகுல் டிராவிட் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சிறப்பாக விளையாடி எந்த அளவுக்கு இந்தியாவின் நம்பர் 1 உருவாகியுள்ளார் என்பதை உணர்த்தவே விரும்பினேன். மேலும் 2வது விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பளிக்க உள்ளதை பற்றி கூறினேன். ஆனால் அதற்காக சஹா மீது எனக்கு உள்ள மரியாதை எப்போதும் குறையாது. எனவே ஒரு கட்டத்தில் உண்மையை அவர் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் இனிமே இந்திய அணிக்கு செலக்ட் ஆகுறது ரொம்ப கஷ்டம் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

ஏற்கனவே 37 வயதை கடந்து விட்ட சஹா தனது வயதை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட் மற்றும் கேஎஸ் பரத் போன்ற அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர்களுக்கு வழிவிட வேண்டும் என கூறியதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அத்துடன் இந்த முடிவை இந்திய தேர்வு குழுவினர் தான் எடுத்தார்கள் என்றும் அதை சஹாவுக்கு உணர்த்துவதற்காகவே அவ்வாறு தெரிவித்ததாக கூறியுள்ள அவர் சஹாவை ஓய்வு பெற சிந்திக்குமாறு கூறியது தன்னுடைய சொந்த முடிவு அல்ல என பதிலளித்துள்ள டிராவிட் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement