அதிரடி 350 ரன்ஸ்.. அசால்ட்டான சிக்ஸர்ஸ்.. வெ.இ, இங்கிலாந்து அணிகளை மிஞ்சிய இந்தியா.. 3 புதிய உலக சாதனை

Indian team 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளிலும் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் செமி ஃபைனலிலும் வெற்றி காண்பதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்துள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, ராகுல் 102 ரன்கள் எடுத்த உதவியுடன் 411 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 210 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்யாமல் வெளியேறியது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்ரு 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா, சிராஜ், குல்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் ரோஹித் சர்மா முதல் ராகுல் வரை அனைத்து இந்திய வீரர்களும் சேர்ந்து மொத்தம் 16 சிக்சர்கள் அடித்தனர்.

இதே போலவே இந்த 2023 காலண்டர் வருடத்தில் இதுவரை இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 215* சிக்ஸர்களை அடித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 215 (2023)*
2. வெஸ்ட் இண்டீஸ் : 209 (2019)
3. தென் ஆப்பிரிக்கா : 203 (2023)*
4. நியூசிலாந்து : 179 (2019)
5. ஆஸ்திரேலியா : 165 (2023)*

- Advertisement -

மேலும் இப்போட்டியில் 410 ரன்கள் அடித்த இந்தியா 2023 காலண்டர் வருடத்தில் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 350+ ரன்களை அடித்த அணி என்ற இங்கிலாந்தின் சாதனையையும் உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து 7 முறை 350+ ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: யுவராஜ் சிங்கின் 2011 உ.கோ சாதனையை உடைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மிடில் ஆர்டரில் புதிய அபாரமான சாதனை

இது போக இப்போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இதற்கு முந்தைய 2 போட்டிகளில் முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிராக முறையே 243, 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்ற தனித்துவ உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

Advertisement