- Advertisement -
இந்திய கிரிக்கெட்

100 ரன்ஸ்.. ஜிம்பாப்வேவை தெறிக்க விட்டு சாம்பியன் என்பதை நிரூபித்த இந்தியா.. உலக சாதனை வெற்றியுடன் கம்பேக்

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற ஜிம்பாப்வே ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 7ஆம் தேதி ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 2 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கம்பேக் வெற்றி:
அதில் அபிஷேக் ஷர்மா ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அப்போது மேலும் அதிரடியாக விளையாடிய அவர் அடுத்த 13 பந்துகளில் 50 ரன்கள் விளாசி சதமடித்து அசத்தார். குறிப்பாக 11வது ஓவரில் 26 ரன்கள் அடித்த அவர் 82 ரன்களில் இருந்த போது 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டார். அந்த வகையில் கடந்த போட்டியில் அறிமுகமாகி டக் அவுட்டான அவர் இப்போட்டியில் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 (47) ரன்கள் குவித்து அவுட்டானார்.

மறுபுறம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் அவர் அவுட்டானதும் தம்முடைய பங்கிற்கு அதிரடியை தூங்கி 11 பவுண்டரி 7 சிக்சருடன் 77* (47) ரன்கள் குவித்தார். கடைசியில் டெத் ஓவர்களில் அவருடன் சேர்ந்து விளையாடிய ரிங்கு சிங் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 48* (22) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 234/2 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு முதல் ஓவரிலேயே இன்னசென்ட் கையாவை 4 ரன்னில் அவுட்டாக்கிய முகேஷ் குமார் அடுத்ததாக வந்து அடித்து நொறுக்கிய பிரையான் பெனட்டையும் 26 (9) ரன்களில் போல்ட்ராக்கினார். அடுத்ததாக வந்த டியோன் மேயர்ஸை டக் அவுட்டாக்கிய ஆவேஷ் கான் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் சிக்கந்தர் ராசாவையும் 4 ரன்களில் காலி செய்தார்.

அடுத்து வந்த கேம்பல் 10, மடண்டே 0, வெலிங்டன் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். கடைசியில் வேஸ்லி 43, லுக் ஜாங்வே 33 ரன்கள் எடுத்தும் 18.4 ஓவரில் ஜிம்பாப்வே 134 ரன்கள் சுருட்டிய இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் கடந்த போட்டியில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தங்களை சாம்பியன் என்பது நிரூபித்தது.

இதையும் படிங்க: 2 ஆவது போட்டியிலேயே எந்த இந்திய வீரரும் படைக்காத மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – அபிஷேக் சர்மா

அத்துடன் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் உலக சாதனையும் இந்தியா சமன் செய்தது. இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவை ஹராரே நகரில் ஆஸ்திரேலியாவும் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -