2 ஆவது போட்டியிலேயே எந்த இந்திய வீரரும் படைக்காத மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – அபிஷேக் சர்மா

Abhishek-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஜிம்பாப்வே அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரரான அபிஷேக் ஷர்மா முதல் போட்டியில் ரன்கள் எதுவும் அடிக்காமல் டக் அவுட்டாகி மோசமான சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் இரண்டாவது போட்டியிலேயே மிகத் தரமான கம்பேக் கொடுத்து இந்திய அணிக்காக மிகப்பெரிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அது குறித்த தகவல் வெளியாகிய தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த அபிஷேக் ஷர்மா 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 2, 4, 6, 4, 6, 4.. எங்களையா அடிச்சீங்க.. ஜிம்பாப்வேவை ஓடவிட்ட அபிஷேக், ருதுராஜ், ரிங்கு.. இந்தியா சாதனை பதிலடி

இவருக்கு முன்னதாக தீபக் ஹூடா தன்னுடைய மூன்றாவது போட்டியிலும், ராகுல் தன்னுடைய நான்காவது போட்டியிலும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் கே.எல் ராகுலுடன் அவர் தற்போது சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement