IND vs WI : முக்கிய போட்டியில் வெ.இ அணியை ஓடவிட்ட இளம் இந்திய படை – 2006க்குப்பின் தொடரும் 17 வருட மானத்தை தக்க வைத்தது எப்படி?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோற்று பின்னடைவை சந்தித்தது. அந்த நிலையில் 2023 உலக கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனைகளை நிறுத்துமாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 3வது போட்டி துவங்கியது. இருப்பினும் ரோகித் மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்த நிலையில் கேப்டனாக பாண்டியா மீண்டும் இந்தியாவை தலைமை தாங்கினார்.

அதைத்தொடர்ந்து டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு மீண்டும் சுப்மன் கில்லுடன் சேர்ந்து மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிசான் 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 77 (64) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ருதுராஜ் 8 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் அசத்திய கில்லுடன் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

வென்ற இளம் படை:
குறிப்பாக கடந்த போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்த அவர் இப்போட்டியில் அதற்கும் சேர்த்து அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 (41) ரன்களை 124.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த கில் 100 ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 11 பவுண்டரியுடன் 85 (92) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அவர்களைத் தொடர்ந்து கடைசிக்கட்ட ஓவர்களில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து 5வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இருப்பினும் அதில் சூரியகுமார் யாதவ் மீண்டும் நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 (30) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70* (52) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 351/5 என்ற மிகப்பெரிய ஸ்கோரை குவித்து அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 352 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே ப்ரெண்டன் கிங்கை டக் அவுட்டாக்கிய முகேஷ் குமார் அடுத்த சில ஓவர்களில் கெய்ல் மேயர்ஸை 4 (10) ரன்களில் காலி செய்து அடுத்ததாக வந்த கேப்டன் சாய் கோப்பையும் 5 (9) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

அதனால் 17/3 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் காப்பாற்ற முயற்சித்த ஹெட்மயர் 4, கேசி கார்ட்டி 6, ரொமானியா செபார்ஃட் 8 என என முக்கிய வீரர்கள் தாக்கூர் மேஜிக் மித வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய அலிக் அதனேஷ் 32 (50) ரன்களில் அவுட்டாக இறுதியில் அல்சாரி ஜோசப் 26 ரன்களும் குடகேஷ் மோட்டி 39* (34) ரன்கள் எடுத்தும் 35.3 ஓவர்லையே வெஸ்ட் இண்டீஸ் அணியை 151 ரன்கள் சுருட்டிய இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அந்தளவுக்கு முக்கிய போட்டியில் முதல் ஓவர்லிருந்து அனலாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த இளம் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடிக்க நாங்களே போதும் என்பதை நிரூபித்தனர்.

இதையும் படிங்க:IND vs WI : கடைசி போட்டியில் வெ.இ பவுலர்களை வெளுத்த கிசான், கில், சாம்சன் – பாண்டியா சூப்பர் ஃபினிஷிங், இந்தியாவின் ஸ்கோர் இதோ

அதை விட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் தொடர்ந்து 13வது ஒரு முறையாக தொடரை வென்று இந்தியா அசத்தியுள்ளது. குறிப்பாக கடைசியாக கடந்த 2006இல் கண்டறிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோற்ற இந்தியா அதன் பின் 17 வருடங்களாக தொடர்ந்து போட்டு வரும் வெற்றி நடையை இந்த தொடரில் வென்று இளம் வீரர்களே நிற்காமல் பார்த்துக் கொண்டனர். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006க்குப்பின் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றிக் கொண்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement