IND vs WI : கடைசி போட்டியில் வெ.இ பவுலர்களை வெளுத்த கிசான், கில், சாம்சன் – பாண்டியா சூப்பர் ஃபினிஷிங், இந்தியாவின் ஸ்கோர் இதோ

IND vs WI 5
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோற்று பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்த நிலையில் 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் இளம் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் 181 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 2019க்குப்பின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அந்த நிலையில் 2023 உலக கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனைகளை நிறுத்துமாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 3வது போட்டி துவங்கியது. ஆனால் அப்போட்டியிலும் ரோகித் மற்றும் விராட் கோலி ஓய்வெடுத்த நிலையில் கேப்டனாக பாண்டியா தலைமை தாங்கிய இந்திய அணியில் உம்ரான் மாலிக், அக்சர் படேல் ஆகியோருக்கு பதிலாக ருதுராஜ், ஜெயதேவ் உன்ட்கட் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

- Advertisement -

பெரிய ரன்கள் குவிப்பு:
அதைத்தொடர்ந்து டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு மீண்டும் சுப்மன் கில்லுடன் சேர்ந்து மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிசான் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்து 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 77 (64) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த ருதுராஜ் 8 (14) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் அசத்திய கில்லுடன் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக கடந்த போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்த அவர் இந்த போட்டியில் அதற்கும் சேர்த்து அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 51 (41) ரன்களை 124.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த கில் இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக அரை சதமடித்து அசத்தியதால் 100 ரன்களை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 11 பவுண்டரியுடன் 85 (92) ரன்களில் அவுட்டாகி சென்றார். அவர்களைத் தொடர்ந்து கடைசிக்கட்ட ஓவர்களில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து 5வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினர்.

இருப்பினும் அதில் சூரியகுமார் யாதவ் மீண்டும் நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 (30) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் டெத் ஓவரில் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து வேகமாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 6, 0, 4, 6, 0, 2 என 18 ரன்கள் அடித்த அவர் மொத்தமாக 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70* (52) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் ஜடேஜா 8* (7) எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 351/5 என்ற மிகப்பெரிய ஸ்கோரை குவித்து அசத்தியது. குறிப்பாக இந்த போட்டியின் மைதானம் ஓரளவு பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்தி 3 முறை 50க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய பேட்ஸ்மேன்கள் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற இந்த முக்கியமான போட்டியில் வெற்றிக்கு போராடும் அளவுக்கு தேவையான ரன்களை எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:IND vs WI : முக்கிய போட்டியில் மீண்டும் அசத்திய இசான் கிசான் – வெ.இ மண்ணில் எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்து புதிய சாதனை

மறுபுறம் சுமாராகவே செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செப்பார்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இருப்பினும் இந்த போட்டியில் எப்படியாவது வென்று 2 தசாபத்திற்கு பின் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் போராடி வருகிறது.

Advertisement