IND vs SL : தனி ஒருவனாக மீண்டும் மிரட்டிய சனாக்கா, கடைசி நேர மன்கட் பரபரபுக்கு மத்தியில் இந்தியா வென்றது எப்படி

IND vs SL Shanaka
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கிரிக்கெட் இந்தியா களமிறங்கியுள்ளது. டிசம்பர் 10ஆம் தேதியன்று கௌகாத்தியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 20 ஓவர்கள் நங்கூரமாக நின்று 143 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் 11 பவுண்டரியுடன் 70 (60) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து அட்டகாசமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 9 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை நெருங்கினாலும் 83 (67) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி ஒருபுறம் நங்கூரமாக நின்றாலும் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாட முயன்ற ஷ்ரேயஸ் ஐயர் 28 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் ஒருபுறம் நங்கூரமாகவும் பேட்டிங் செய்த விராட் கோலி 4வது விக்கெட் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்திய போது மறுபுறம் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க அதிரடியாக விளையாட முயற்சித்தாலும் மீண்டும் 39 (29) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

- Advertisement -

அப்போது வந்த ஹர்டிக் பாண்டியா 14, அக்சர் பட்டேல் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த விராட் கோலி தாம் கொடுத்த சில கேட்ச்களை தவற விட்ட இலங்கைக்கு தண்டனை கொடுக்கும் வகையில் மேலும் சிறப்பாக செயல்பட்டு 12 பவுண்டரி 1 சிக்சருடன் தன்னுடைய 45வது சாதத்தை விளாசி 113 (87) ரன்கள் குவித்து அவுட்டானார். அவரது அதிரடியால் 50 ஓவர்களில் இந்தியா 373/7 ரன்களை குவித்த நிலையில் சுமாராக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கைக்கு பெர்னாண்டோ 5, குஷால் மெண்டிஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் இந்தியாவுக்கு அபார தொடக்கம் கொடுத்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய அசலங்கா அதிரடியாக விளையாட முயற்சித்தும் 28 (23) ரன்களில் உம்ரான் மாலிக் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 64/3 என தடுமாறிய அந்த அணியை மற்றொரு தொடக்க வீரர் நிசாங்கவுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்கப் போராடிய தனஞ்செயா டீ சில்வா போராடி 9 பவுண்டரியுடன் 47 (40) ரன்களில் அவுட்டானார். அதனால் மேலும் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடிய தொடக்க வீரர் நிசாங்காவும் 11 பவுண்டரியுடன் 72 (80) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் உம்ரான் மாலிக்கிடம் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த ஹசரங்கா 16 (7), வெள்ளலகே 0 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வியின் பிடியில் சிக்கிய இலங்கையை கேப்டன் சனக்கா மீண்டும் பொறுப்புடன் விளையாடி காப்பாற்ற போராடினார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் கடைசி ஓவரில் சதத்தை நெருங்கி 98 ரன்களில் இருந்த போது 4வது பந்தில் முகமது ஷமி எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை தாண்டியதற்காக ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

இருப்பினும் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து விளையாடிய சனாக்கா 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 67 ரன்கள் வித்யாசத்தில் வென்றது. அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இப்போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்கள் அனைவருமே அதிக பந்துகளை சாப்பிடாமல் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இதையும் படிங்க: IND vs SL : தனி ஒருவனாக மீண்டும் மிரட்டிய சனாக்கா, கடைசி நேர மன்கட் பரபரபுக்கு மத்தியில் இந்தியா வென்றது எப்படி

அவர்களது அதிரடியான ரன் குவிப்பால் கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு இலக்கு இருந்ததால் இந்திய பவுலர்களும் ஆரம்பம் முதலே தைரியத்துடன் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த அதே பிட்ச்சில் முக்கிய இலங்கை பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் சிறப்பாக செயல்பட்டு எஞ்சிய வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2023 உலகக் கோப்பை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

Advertisement