- Advertisement -
இந்திய கிரிக்கெட்

84க்கு ஆல் அவுட்.. சுருட்டி வீசிய இந்தியா.. தென்னாப்பிரிக்காவை ஒரு வெற்றியை கூட பெற விடாமல் அசத்தல்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த நிலையில் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி ஜூலை ஒன்பதாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது.

சேப்பாக்கத்தில் இரவு 7 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் திணறலாக விளையாடியது. அந்த வகையில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அந்த அணிக்கு கேப்டன் லாரா 9, காப் 10, போஸ்க் 17, சோலே ட்ரியன் 9, டீ கிளார்க் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக தன்சிம் பிரிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்திரக்கர் 4, ராதா யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 85 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 8 பவுண்டரி 2 சிக்சருடன் 54* (40) ரன்கள் எடுத்தார்.

அவருடன் நிதானமாக விளையாடிய ஷபாலி வர்மா 27* (25) ரன்கள் எடுத்ததால் 10.5 ஓவரிலேயே 88/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 1 – 1 (3) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் இந்தியா தங்களின் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு வெற்றியை கூட கொடுக்கவில்லை. ஆம் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அந்த சூழ்நிலையில் இந்த டி20 தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா இதையாவது வெல்வோம் என்று நினைத்தது. ஆனால் அந்தத் தொடரிலும் கடைசி போட்டியில் வென்ற இந்தியா 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இதையும் படிங்க: இது தோனி கொடுத்த பொறுப்பு மாதிரி ரொம்ப கஷ்டம்.. விராட் கோலி பற்றிய கேள்விக்கு.. ருதுராஜ் பேட்டி

அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவை ஒரு தொடரை கூட வெல்ல முடியாமல் இந்தியா அசத்தியுள்ளது. அதன் வாயிலாக ஆடவர் கிரிக்கெட்டை போலவே ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மகளிர் இந்திய அணியும் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -