2022 தோல்விக்கு பழி தீர்த்த ராகுல் படை.. வரலாற்றில் 2வது முறையாக தெ.ஆ மண்ணில் இந்தியா சரித்திரம் படைத்தது எப்படி?

IND vs RSA ODI 23
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. அதனால் சமனைடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் 10, ரஜத் படிதார் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 21 ரன்களில் போராடி அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் மெதுவாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் கடந்து 52 (77) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து 108 (114) ரன்கள் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரிங்கு சிங் 38, வாஷிங்டன் 14 சுந்தர், அர்ஷிதீப் 7* ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 296/8 ரன்கள் எடுத்து அசத்தியது.

தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பியூரன் ஹென்றிக்ஸ் 3, நன்ரே பர்கர் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 297 ரன்களை சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு டீ ஜோர்சியுடன் சேர்ந்து 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய ஹென்றிக்ஸ் 19 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் 2 ரன்களில் அக்சர் படேல் சுழலில் கிளீன் போல்டானதால் தென்னாப்பிரிக்கா தடுமாறியது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் ஹைடன் மார்க்ரம் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். அதை விட கடந்த போட்டியில் சதமடித்து வெற்றியை பறித்த துவக்க வீரர் டோனி டீ ஜோர்சியை 81 ரன்கள் எடுத்திருந்த போது அர்ஷிதீப் காலி செய்து திருப்புமுனையை உண்டாக்கினார். அப்போது வந்த ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாட முயற்சித்து 21 (22) ரன்களில் சாய் சுதர்சனின் அபாரமான கேட்ச்சால் அவுட்டானார்.

அதனால் திணறிய தென்னாப்பிரிக்காவை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட டேவிட் மில்லரும் 10 ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். இறுதியில் அடுத்து வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 45.5 ஓவரிலேயே 218 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4, வாஷிங்டன் சுந்தர் 2, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: இதுக்காக மட்டும் தான் ரொம்ப நாளா காத்திருந்தேன். தனது முதல் சதத்திற்கு பிறகு – சஞ்சு சாம்சன் பேசியது என்ன?

அதன் காரணமாக விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா கோப்பை வென்றது. குறிப்பாக 2022இல் இதே ராகுல் தலைமையில் 3 – 0 (3) என்ற கணக்கில் சந்தித்த தோல்விக்கு இந்தியா பழி தீர்த்தது. அத்துடன் விராட் கோலி தலைமையில் 2018இல் பதிவு செய்த முதல் வெற்றிக்கு பின் 2வது முறையாக தென்னாபிரிக்க மண்ணில் ஒரு ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

Advertisement