இதுக்காக மட்டும் தான் ரொம்ப நாளா காத்திருந்தேன். தனது முதல் சதத்திற்கு பிறகு – சஞ்சு சாம்சன் பேசியது என்ன?

Samson
- Advertisement -

கேரளாவை சேர்ந்த 29 வயதான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவரது அறிமுக வாய்ப்பிற்காக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் காத்திருந்தார். அதன் பிறகு 2021-ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் இடம் பிடித்த அவர் அவ்வப்போது சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் போதே வாய்ப்பினை பெற்று வந்தார்.

அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 402 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பினை பெறவில்லை என்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பினை பெற்றார். அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார்.

இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 114 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 108 ரன்கள் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்து தனது சதம் குறித்து பேசிய சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சதத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இப்படி ஒரு அற்புதமான சதத்தை அடித்ததில் மகிழ்ச்சி. இதற்காக உடல் அளவிலும், மனதளவிலும் நிறையவே உழைத்தேன். இறுதியில் என்னுடைய பக்கம் ஆட்டம் திரும்பி இருக்கிறது.

இதையும் படிங்க : தல தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக புதிய சாதனையை நிகழ்த்திய – கே.எல் ராகுல்

தென்னாப்பிரிக்க வீரர்கள் புதிய பந்திலும் சரி, பழைய பந்திலும் சரி சிறப்பாக பந்து வீசினார்கள். அதன் காரணமாக இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கே.எல் ராகுல் ஆட்டம் இழந்து வெளியேறியதும் எங்கள் அணி பின்னடைவை சந்தித்தாலும் திலக் வர்மாவுடன் சேர்ந்து நான் அமைத்த பாட்னர்ஷிப் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement