தல தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக புதிய சாதனையை நிகழ்த்திய – கே.எல் ராகுல்

Dhoni-and-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்தது. அதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு 297 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களையும், திலக் வர்மா 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது 35 பந்துகளை சந்தித்து 22 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்களை கடந்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பராக சாதனையை படைத்திருந்தார்.

இதையும் படிங்க : 19 வயது வீரருக்கு பதிலாக 32 வயது வீரரை தவறுதலாக வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் – ஏலத்தின் போது ஏற்பட்ட குழப்பம்

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் ராகுல் அடித்த ரன்களுடன் சேர்த்து இந்த 2023-ஆம் ஆண்டில் விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்த 2023-ஆம் ஆண்டில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராக 1000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement