19 வயது வீரருக்கு பதிலாக 32 வயது வீரரை தவறுதலாக வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் – ஏலத்தின் போது ஏற்பட்ட குழப்பம்

PBKS
- Advertisement -

துபாயில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது கோலாலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில் தலைமையில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா தலைமையில் கலந்து கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணியும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை நல்ல தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது.

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இம்முறை மினி ஏலத்தில் ஹர்ஷல் பட்டேல், ரைலி ரூசோ, கிரிஸ் வோக்ஸ், பிரின்ஸ் சௌத்ரி, தானே தியாகராஜன், விஸ்வநாத் பிரதாப் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

ஏற்கனவே ஸ்டார் பிளேயர்கள் நிறைந்திருக்கும் இந்த பஞ்சாப் அணியில் தற்போது மேலும் சில வீரர்கள் அணியில் இணைந்துள்ளதால் அந்த அணி பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏலத்தின் போது பஞ்சாப் அணியை சேர்ந்த நிர்வாகிகள் தவறுதலாக ஒரு வீரரை மாற்றி ஏலத்தில் எடுத்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் 19 வயது வீரரை வாங்குவதற்கு பதிலாக பெயர் குழப்பத்தினால் 32 வயதான ஒரு வீரரை தவறுதலாக ஏலத்தில் எடுத்த விடயம் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ஏலத்தில் இடம்பெற்ற ஷஷாங்க் சிங் (19) என்பவரை வாங்க நினைத்த பஞ்சாப் அணியானது ஷஷாங்க் சிங் (32) வயதான வீரரை மாற்றி எடுத்தது.

- Advertisement -

பின்னர் சற்று தாமதமாக இதனை அறிந்த பஞ்சாப் நிர்வாகம் குழப்ப நிலையை சந்தித்தாலும் தாங்கள் வாங்கிய அந்த வீரரை தக்க வைத்துக் கொள்வதாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

இதையும் படிங்க : முதல் போட்டியில் சாய் சுதர்சன் உடைத்த கிங் கோலியின் சாதனையை.. இன்று தூளாக்கிய திலக்.. புதிய சாதனை

ஷஷாங்க் சிங்கை (19) வாங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. ஆனால் ஏலத்தின் பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் ஆகிவிட்டது. இருப்பினும் நாங்கள் எடுத்த வீரரை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement