முதல் போட்டியில் சாய் சுதர்சன் உடைத்த கிங் கோலியின் சாதனையை.. இன்று தூளாக்கிய திலக்.. புதிய சாதனை

Tilak Varma Sai Sudharsan
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்தலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா தொடரை சமன் செய்ததால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி டிசம்பர் 21ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் போராடி 296/8 ரன்கள் சேர்த்து அசத்தியது. இந்திய அணிக்கு அறிமுக வீரராக களமிறங்கிய ரஜத் படிதார் 22, சாய் சுதர்சன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த கேப்டன் கேஎல் ராகுலும் 21 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

திலக் வர்மாவின் சாதனை:
அந்த சூழ்நிலையில் மறுபுறம் களமிறங்கி இருந்த சஞ்சு சாம்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அடுத்ததாக வந்த இளம் திலக் வர்மா மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களை கடுப்பேற்றினார். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு பின் வேகமாக ரன்கள் குவித்த அவர் 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (77) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து 108 (114) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் ரிங்கு சிங் 38 வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஹென்றிக்ஸ் 3 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 101/3 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சவாலான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 8 வருட போராட்டம்.. திணறிய இந்தியாவை சாதனையுடன் தூக்கிய சஞ்சு சாம்சன்.. கிங் கோலிக்கு நிகராக அசத்தல்

குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி படைத்திருந்த இந்த சாதனையை முதல் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் உடைத்திருந்தார். தற்போது 3வது போட்டியில் அந்த சாதனையை உடைத்துள்ள திலக் வருமா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. திலக் வர்மா : 21 வருடம் 43 நாட்கள்*
2. சாய் சுதர்சன் : 22 வருடம் 63 நாட்கள்
3. விராட் கோலி : 22 வருடம் 68 நாட்கள்
4. ராகுல் டிராவிட் : 24 வருடம் 22 நாட்கள்

Advertisement