8 வருட போராட்டம்.. திணறிய இந்தியாவை சாதனையுடன் தூக்கிய சஞ்சு சாம்சன்.. கிங் கோலிக்கு நிகராக அசத்தல்

Sanju Samson 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகள் பெற்றது. அதனால் சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 4.30 மணிக்கு பார்ல் நகரில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமாக களமிறங்கினார். அதை தொடர்ந்து ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சித்து 22 (16) ரன்களில் அவுட்டாக தமிழக வீரர் சாய் சுதர்சனும் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சாதித்த சாம்சன்:
அதனால் 49/2 என தடுமாறிய இந்தியாவை சஞ்சு சம்சானுடன் சேர்ந்து மீட்க முயற்சித்த கேப்டன் கேஎல் ராகுல் 3வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த திலக் வர்மா மிகவும் மெதுவாக விளையாடி போட்டியில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

இருப்பினும் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்த சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா கடைசியில் கொஞ்சம் வேகமாக விளையாடி அரை சதம் கடந்து 52 (77) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் நேரம் செல்ல செல்ல தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலை கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தன்னுடைய தரத்தை காண்பித்தார்.

- Advertisement -

குறிப்பாக 2015இல் அறிமுகமாகி குப்பையைப் போல் நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் 2021இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாகவே செயல்பட்டு வந்தார். இருப்பினும் பெரிய ரன்கள் அடிக்காததால் புறக்கணிக்கப்பட்ட வந்த அவர் தற்போது முதல் முறையாக சதமடித்த மகிழ்ச்சியில் தன்னுடைய பலத்தை காண்பித்து கொண்டாடி மொத்தம் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 108 (114) ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: ஸ்டார்க், கமின்ஸ்க்கு 45.25 கோடி ரொம்ப ஓவர்.. அந்த 2 டீமை தவிர ஏலத்தில் யாருமே அசத்தல.. ஏபிடி ஓப்பன்டாக்

அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்த முதல் கேரளாவை சேர்ந்த வீரர் என்ற சாதனையை படைத்த அவர் கங்குலி (2003இல்), விராட் கோலிக்கு (2018இல்) பின் தென்னாப்பிரிக்க மண்ணில் 3வது இடத்தில் களமிறங்கி சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். ரிங்கு சிங் 38 (27) அதிரடியாக வாசிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 296/8 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பியூரன் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Advertisement