ஸ்டார்க், கமின்ஸ்க்கு 45.25 கோடி ரொம்ப ஓவர்.. அந்த 2 டீமை தவிர ஏலத்தில் யாருமே அசத்தல.. ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers 5
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்களை விட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்சேல் ஸ்டார்க் 24.75, கேப்டன் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு முறையே கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்கள்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் மற்றும் அதிக தொகைக்கு விலை போன வீரர் ஆகிய சாதனைகளை அவர்கள் படைத்தனர். இருப்பினும் தோனி முதல் பும்ரா வரை இந்திய ஜாம்பவான் வீரர்கள் 15 கோடிக்கும் குறைவான சம்பளத்தில் விளையாடி வரும் நிலையில் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரை நாட்டுக்காக புறக்கணித்த இவர்களுக்கு இவ்வளவு கோடிகளை கொடுத்தது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏபிடி வியப்பு:
இந்நிலையில் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணிகள் மட்டுமே மிகவும் சாதூரியமாக செயல்பட்டதாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ஆனால் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்றாலும் 45.25 கோடிகளை கொடுத்தது அதிகம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“இந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய சில அணிகள் நன்றாக செயல்பட்டன. அந்த அணிகள் உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் சாதுரியமாக வீரர்களை வாங்கினார்கள். பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் மகத்தான வீரர்கள். ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய தொகையா? இருப்பினும் இது அவர்களுடைய டிமேண்டை காட்டுகிறது”

- Advertisement -

“குறிப்பாக இந்த வருட ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய டிமேண்ட் இருந்தது. அதனாலேயே அவர்களுடைய மதிப்பும் விலையும் உயரே சென்றுள்ளது” என்று கூறினார். முன்னதாக சமீப காலங்களாகவே பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் கண்டிப்பாக வாங்கிய பணத்திற்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தால் சுமாராக செயல்பட்டனர்.

இதையும் படிங்க: ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்ட நேரமா.. இங்கிலாந்து வீரருக்கு ஆஸி வாரியம் அதிரடி தடை.. நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாக மும்பை அணியில் இசான் கிசான் பஞ்சாப் அணியில் சாம் கரண் ஆகியோர் மிகப்பெரிய கோடிகளுக்கு வாங்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தத்தில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அந்த நிலைமையில் அனுபவம் மிகுந்த ஸ்டார்க், கமின்ஸ் ஆகியோர் அசத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மறுபுறம் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஏலத்தில் சாதுரியமாக செயல்படுவதாலேயே 5 கோப்பைகளை அலமாரியில் அடுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement