117 பந்துகள் மீதம்.. 8 – 0 என எழுதப்பட்ட வரலாறு.. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ஹிட்மேனின் இந்தியா

IND vs PAk3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி உலகின் மிகப்பெரிய அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்தில் மதியம் 2 மணிக்கு துவங்கிய போட்டிகள் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அப்துல்லா ஷபிக் 20, இமாம்-உல்-ஹக் 36 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அவர்களை தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார்கள். இருப்பினும் அதில் பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்ததும் சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

தொடரும் சரித்திரம்:
ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த சவுத் ஷாக்கில் 6, இப்திகார் அகமது 4 என 2 வீரர்கள் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதை விட மறுபுறம் நிதானத்தை காட்டிய முகமது ரிஸ்வானை 49 ரன்களில் போல்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த சடாப் கானையும் 2 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து முகமது நவாஸ் 4, ஹசான் அலி 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 42.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

மறுபுறம் 155/2 என வலுவாக அந்த அணியை அடுத்த 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து சுருட்டிய இந்தியா சார்பில் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (11) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலையில் வந்த ஸ்ரேயாஸ் நிதானத்தை காட்டிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்பது போல் பாகிஸ்தான் பவுலர்கள் விழி பிதுங்கும் அளவுக்கு அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா 36 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார்.

நேரம் செல்ல செல்ல அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 53* (62) ரன்களும் கேஎல் ராகுல் 19* (29) ரன்களும் எடுத்தனர். அதனால் 30.3 ஓவரிலேயே 117 பந்துகள் மீதம் வைத்து 192/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் ரன்ரேட் அடிப்பையில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

இதையும் படிங்க: 117 பந்துகள் மீதம்.. 8 – 0 என எழுதப்பட்ட வரலாறு.. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ஹிட்மேனின் இந்தியா

அதை விட 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளிலும் 8 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா பரம எதிரிக்கு எதிரான வரலாற்றை 8 – 0 என்ற கணக்கில் வரலாற்றில் எழுதி தங்களுடைய கௌரவத்தை தக்கவைத்து ரசிகர்களை தலை நிமிர வைத்துள்ளது. அதனால் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்கள் எடுத்தும் வரலாற்றை மாற்ற முடியாமல் அவமான படுதோல்வியை சந்தித்தது.

Advertisement