அண்டர்-19 உ.கோ 2024 : 2.850 ரன்ரேட்.. 100க்கு ஆல் அவுட்டாக்கி அயர்லாந்தை அலறவிட்ட இந்திய அணி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தப்போகும் வருங்கால வீரர்களை அடையாளப்படுத்துவதற்காக ஐசிசி நடத்தும் 2024 அண்டர்-19 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த நடப்பு சாம்பியன் இந்தியா ஜனவரி 25ஆம் தேதி 2வது போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. ப்ளூம்போண்டெய்ன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ஆதர்ஷ் சிங் 17, அர்சின் குல்கர்னி 32 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த முசீர் கான் மற்றும் கேப்டன் உதய் சஹரன் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். 20வது ஓவரில் இணைந்த இவர்கள் 45 ஓவர்கள் வரை சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 156 பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர்.

- Advertisement -

மெகா வெற்றி:
அதில் கேப்டன் உதய் சகரன் அரை சதமடித்து 75 ரன்களில் அவுட்டானார். அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடிய இளம் இந்திய வீரர் சர்பராஸ் கானின் தம்பியான முசிர் கான் 9 பவுண்டரி 4 சிக்சருடன் அபாரமான சதமடித்து 118 (106) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆரவெல்லி அவினாஷ் 22 (13) சச்சின் தாஸ் 21* (9) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 301/7 ரன்கள் குவித்து அசத்தியது.

மறுபுறம் சுமாராக செயல்பட்ட அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஆலிவர் ரிலே 3, ஜான் மெக்னேலி 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 302 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து ஆரம்ப முதலே இந்திய பவுலர்களின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

அந்த வகையில் 50 ஓவர்கள் கூட தாக்குபிடிக்க முடியாத அந்த அணி 29.4 ஓவரில் வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படு தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக 10வது இடத்தில் களமிறங்கிய டெயில் எண்டர் டேனியல் போர்கின் 27* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக நமன் திவாரி 4, சௌமி பாண்டே 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க: 152க்கு ஆல் அவுட்.. அசத்திய சர்பராஸ், சுந்தர்.. இந்த பக்கமும் இங்கிலாந்து லயன்ஸை பொளக்கும் இந்தியா ஏ அணி

அதனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா இந்த அண்டர்-19 உலகக் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் 2 போட்டிகளில் அடுத்தடுத்த 2 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. மேலும் 2 போட்டிகளில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் குரூப் ஏ புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் +2.850 ரன்ரேட்டை கொண்டுள்ள இந்தியா முதலிடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. ஏனெனில் இதே பிரிவில் மீதமுள்ள வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மைனஸ் ரன்ரேட்டை கொண்டுள்ளன.

Advertisement