152க்கு ஆல் அவுட்.. அசத்திய சர்பராஸ், சுந்தர்.. இந்த பக்கமும் இங்கிலாந்து லயன்ஸை பொளக்கும் இந்தியா ஏ அணி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை முதல் நாளிலேயே 246 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா தங்களுடைய பேட்டிங்கில் 119/1 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்து தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறது. முன்னதாக இத்தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் பயிற்சி போட்டிகளில் மோதி வருகின்றன. அதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி ஜனவரி 24ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது.

- Advertisement -

இந்த பக்கமும் அடி:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்தியா ஏ பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஒலிவர் ப்ரைஸ் 48, பிரிடோன் கார்ஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4, யாஷ் தயாள் 2, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பத்திலேயே நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 58 ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த திலக் வர்மா 6 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் தேவ்தூத் படிக்கல் சிறப்பாக பேட்டின் செய்து சதமடித்து 17 பவுண்டரியுடன் 105 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அப்போது வந்த ரிங்கு சிங் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக வந்து 5வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அசத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்து 57 ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சர்ப்ராஸ் கான் சதமடித்தும் ஓயாமல் 18 பவுண்டரி 5 சிக்சருடன் 161 (160) விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: தரமான ஜோ ரூட்டை அசால்ட்டாக.. அடக்குவதில் நேதன் லயனை முந்திய ஜடேஜா.. புதிய சாதனை

இறுதியில் சௌரப் குமார் தம்முடைய பங்கிற்கு 77 ரன்கள் குவித்ததால் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ 493 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. குறிப்பாக வெறும் 152 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் இங்கிலாந்து லயன்ஸை 493 ரன்கள் குவித்து பொளந்த இளம் வீரர்கள் இந்தியா ஏ அணிக்கு 341 ரன்கள் முன்னிலையை பெற்றுக் கொடுத்துள்ளனர். அத்துடன் 2வது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ போட்ஸ் 6, பிரிடோன் கார்ஸ் 3 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement