வெறும் 6 ரன்ஸ்.. போராடிய ஆஸ்திரேலியாவின் வெற்றியை கடைசி ஓவரில்.. இந்திய அணி பறித்தது எப்படி?

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 3ஆம் தேதி 7 மணிக்கு பெங்களூரு நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 21 (15) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய ருதுராஜ் 10 (12) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அதனால் 55/4 என சரிந்த இந்திய அணிக்கு முக்கிய நேரத்தில் அதிரடி காட்டிய ஜித்தேஷ் சர்மா 24 (16) ரன்கள் விளாசி அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 31 (21) ரன்கள் எடுத்த நிலையில் எதிர்ப்புறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்து 53 (37) ரன்கள் குவித்தார். அவர்களது ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்தியா 160/8 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக பெரன்ஃடாப், துவார்சுய்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 161 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஜோஸ் பிலிப் 4 ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக வெளுத்து வாங்கிய ட்ராவிஸ் ஹெட் 28 (18) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய ரவி பிஸ்னோய் அடுத்து வந்த ஆரோன் ஹார்டியை 6 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.  அதனால் 55/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு பென் டெக்மொர்ட் அதிரடியாக விளையாடிமார். ஆனால் அவருடன் எதிர்புறம் தடுமாறிய டிம் டேவிட் 4வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 17 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே பென் டெக்மொர்ட் 5 சிக்ஸருடன் 54 (36) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதை அப்படியே பயன்படுத்திய முகேஷ் குமார் அடுத்த ஓவரில் மேத்தியூ ஷார்ட்டை 16 (11) ரன்களில் அவுட்டாக்கி பென் துவார்சுய்ஸை டக் அவுட்டாக்கினார். ஆனால் கடைசி நேரத்தில் கேப்டன் மேத்தியூ வேட் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதை வீசிய அரஷ்தீப் சிங் முதல் 2 பந்துகளில் ரன்கள் கொடுக்காமல் 3வது பந்தில் மேத்தியூ வேடை 22 ரன்களில் அவுட்டாக்கி கடைசி 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இறுதியில் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை 154/8 ரன்களுக்கு கட்டுப்படுத்த இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் வென்று காட்டியுள்ளது.

இதையும் படிங்க: அன்றும் இன்றும் இந்திய அணியில் அவங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்ல.. முரளிதரன் பாராட்டு

குறிப்பாக முகேஷ் குமார் 17, 19வது ஓவரில் 5, 7 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அரஷ்தீப் கடைசி ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தது இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. அந்த வகையில் 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, அரஷ்தீப் 2, ரவி பிஸ்னோய் 2 விக்கெட்களை எடுத்தனர்.

Advertisement