அன்றும் இன்றும் இந்திய அணியில் அவங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்ல.. முரளிதரன் பாராட்டு

Muttiah Muralitharan 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை நழுவ விட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா கோப்பையை வென்று இருதரப்பு தொடரில் தங்களை வலுவான அணி என்பதை காண்பித்தது.

முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாமல் சூரியகுமார் தலைமையில் களமிறங்கிய இந்தியாவுக்கு இத்தொடரில் ரிங்கு சிங் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினர். அந்த வகையில் சுழல் பந்து வீச்சு துறையில் இளம் வீரர் ரவி பிஷ்னோய் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தார்.

- Advertisement -

முரளிதரன் பாராட்டு:
இந்நிலையில் அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின் போல அன்றும் இன்றும் இந்திய அணியில் எப்போதுமே தரமான ஸ்பின்னர்களுக்கு பஞ்சமில்லை என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். குறிப்பாக இளம் வீரர் ரவி பிஷ்னோய் மற்ற ஸ்பின்னர்களை விட தனித்துவமாக பந்து வீசுவதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அனைத்து தலைமுறையிலும் இந்தியா எப்போதுமே நல்ல ஸ்பின்னர்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக அனில் கும்ப்ளே முதல் ரவிச்சந்திரன் அஸ்வின் போல தற்போது நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வந்துள்ளார்கள். அதில் ரவி பிஷ்னோய் மற்ற ஸ்பின்னர்களை விட மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார். குறிப்பாக அவர் சற்று வேகமாக வீசி பந்தை அதிகமாக நகர்த்துகிறார்”

- Advertisement -

“அக்சர் படேல் துல்லியமாக வீசக்கூடியவர் என்றாலும் பந்தை அதிகமாக சுழற்ற மாட்டார். வாஷிங்டன் சுந்தரும் அதே போல செயல்படக்கூடியவர். அதிகமாக சுழற்றா விட்டாலும் பந்தை துல்லியமாக அதிகப்படியான வேகத்தில் வீசக்கூடியவர். இப்போதுள்ள ஸ்பின்னர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு களத்தில் செட்டிங் செய்யப்படும் ஃபீல்டிங்க்கு தகுந்தாற் போல் பந்து வீச வேண்டும்”

“முதலில் ஃபீல்டிங்கை செட்டிங் செய்து அதற்கு தகுந்தார் போல பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலத்திற்கு சென்று பயப்படாமல் பந்து வீச வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ரவி பிஷ்னோய், ரிங்கு சிங் போன்ற நிறைய இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement