159 ரன்ஸ்.. கைவிட்ட ரோஹித்.. மாஸ் கம்பேக் கொடுத்த துபே.. ஆப்கானிஸ்தானை இளம் இந்திய படை வீழ்த்தியது எப்படி?

IND vs AFG 2
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்கியது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இரவு 7 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களில் அவுட்டானார்.

அவருடன் மறுபடியும் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரானும் 25 ரன்களில் சிவம் துபே வேகத்தில் அவுட்டானார். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த ரஹமத் ஷா 3 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கியதால் 57/3 என ஆப்கானிஸ்தான் தடுமாறியது. அப்போது வந்த நட்சத்திர வீரர் முகமது நபி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அசத்திய துபே:
அவருடன் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் சற்று தடுமாற்றமாகவே விளையாடிய ஓமர்சாய் 29 (22) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய முகமது நபியும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (27) ரன்கள் குவித்து முகேஷ் குமார் வேதத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் நஜிபுல்லா ஜாட்ரான் 19* கரீம் ஜானத் 9* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 158/5 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 159 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 14 மாதங்கள் கழித்து விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே தவறான புரிதலால் ரன் அவுட்டாகி சென்றார். அவரை அவுட் செய்து விட்ட மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்த சில ஓவரிலேயே 23 (12) ரன்களில் ஸ்டம்ப்கிங் முறையில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 28/2 தடுமாறிய இந்தியாவை அடுத்ததாக சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்க முயற்சித்தனர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் திலக் வர்மா 26 (22) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக 5 பவுண்டரியுடன் 31 (20) ரன்கள் விளாசி அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய சிவம் துபே நேரம் செல்ல செல்ல அதிரடியாக செயல்பட்டு அரை சதமடித்து 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60* (40) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் ரிங்கு சிங் 16* ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரிலேயே 159/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று 1 – 0* (3) என இத்தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 159 ரன்ஸ்.. கைவிட்ட ரோஹித்.. மாஸ் கம்பேக் கொடுத்த துபே.. ஆப்கானிஸ்தானை இளம் இந்திய படை வீழ்த்தியது எப்படி?

குறிப்பாக 1 விக்கெட் 60* ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு ஆல்ரவுண்டராக செயல்பட்டு துபே இப்போட்டியில் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரகுமான் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement