அனுபவத்தால் அடித்த நபி.. முதல் டி20யில் இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

Shivam Dube
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்கியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இரவு 7 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தினாலும் சற்று மெதுவாகவே விளையாடி 8 ஓவரில் 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஹமனுல்லா குர்பாஸ் 23 (28) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அவருடன் மறுபுறம் விளையாடிய இப்ராஹிம் ஜாட்ரான் 25 (22) ரன்களில் சிவம் துபே வேகத்தில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ராகில் சா 3 ரன்களில் அக்சர் படேல் சுழலில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அதனால் 57/3 என தடுமாறிய ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் முகமது நபி அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார். அவருக்கு மறுபுறம் நிதானமாக விளையாடி கை கொடுத்த ஓமர்சாய் 5வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானை ஓரளவு மீட்டெடுத்து முகேஷ் குமார் வேதத்தில் 29 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய முகமது நபி 2 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (27) ரன்கள் குவித்து போராடி முகேஷ் குமார் வேகத்தில் அவுட்டானார். இறுதியில் நஜிபுல்லா ஜாட்ரான் அதிரடியாக 4 பவுண்டரியுடன் 19* (11) ரன்களும் கரீம் ஜானத் 9* (5) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 158/5 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே பவர் பிளே ஓவர்களில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாத இந்திய பவுலர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தினார்கள். அதே போல மிடில் ஓவர்களில் முகமது நபியை தவிர்த்து எஞ்சிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வதற்கு தடுமாறினார்கள்.

இதையும் படிங்க: அனுபவத்தால் அடித்த நபி.. முதல் டி20யில் இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

இருப்பினும் வெற்றிக்கு போராடும் அளவுக்கு இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையை பயன்படுத்தி நல்ல ஸ்கோரை எடுத்துள்ளது. எனவே அதை சேசிங் செய்து வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. குறிப்பாக மொஹாலி மைதானத்தில் இதற்கு முன் நடைபெற்ற 6 போட்டிகளில் 4 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement