முதல் டி20யில் காயத்தால் விலகிய இளம் வீரர்.. தமிழக வீரருடன் ரோஹித் வெளியிட்ட இந்திய பிளேயிங் லெவன்

IND vs AFG 1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்கியது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் 14 மாதங்கள் கழித்து ரோகித் சர்மா இந்தியாவின் டி20 கேப்டனாக விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிலைமையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இரவு 7 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த நம்பிக்கை நாயகன் விராட் கோலி இந்த போட்டியில் சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்திய லெவன்:
இருப்பினும் துவக்க வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த யாசஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முதல் போட்டியில் காயத்தை சந்தித்ததால் விளையாடவில்லை என்று ரோகித் சர்மா அறிவித்தார். அதன் காரணமாக கில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற நிலைமையில் விராட் கோலி விளையாடக் கூடிய 3வது இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதே போல காயத்தால் விலகிய மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக 4வது இடத்தில் சிவம் துபே விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய அவர் கடைசியாக நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் கழற்றி விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வாய்ப்பு பெற்று விளையாடும் 11 பேர் அணியிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா தேர்வாகியுள்ள நிலையில் ஃபினிஷராக ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். மேலும் அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 ஸ்பின்னர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. மற்ற படி முகேஷ் குமார் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க: 2012லயே சிங்கம் மாதிரி கர்ஜித்தாரு.. அவர்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. இங்கிலாந்தை எச்சரித்த கிரேம் ஸ்வான்

2024 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ரிங்கு சிங் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னோய், அரஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

Advertisement