
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் தரம்சாலா நகரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜூன் 17-ஆம் தேதியான இன்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணி பெற்ற மிகப்பெரிய இரண்டாவது தோல்வியாக இந்த தோல்வி பதிவாகியது.
இதையும் படிங்க : பியூஷ் சாவ்லாவுக்கு அடுத்து இரண்டாவது வீரராக குர்னூர் பிரார் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
இன்றைய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.